ட்ரிக்கர் படம் எதிர்பார்த்தது மாதிரியே.. இதை பார்த்தா கண்டிப்பா படம் பாப்பிங்க.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
இயக்குனர் சாம் ஆண்டன் திரைக்கதையில் ஹரியை பாலோ பண்றாரு. எங்குமே திரைக்கதை பிசிறு தட்டாத வண்ணம் படு வேகமா எடுத்துட்டு போறது தான் இவரோட மிகப்பெரிய ப்ளஸ். இவரோட இயக்கத்தில் வெளியாகி செம்ம ஹிட் அடித்த டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கூர்க்கா, 100 போன்ற படங்களில் சூப்பரா படம் பார்க்கும் ரசிகர்களை சூப்பரா என்டேர்டைன் பண்ணிருப்பாரு.
அதேபோல் தான் ட்ரிக்கர் படமும். சமீபத்தில் வெளிவந்த டீசர், ட்ரைலர் எல்லாம் படத்துக்கு என்ன மூட் செட் பண்ணுச்சோ படமும் அப்படி தான் இருக்கு. கண்டிப்பா பார்க்கலாம் அப்படிங்கிற அளவுக்கு ஒரு படத்தை எடுத்திருக்காரு சாம். அதர்வாவை பொறுத்தவரை இதுவரை வந்த படங்களில் போட்ட சண்டைக்காட்சிகளை விட இந்த படத்தில் சும்மா மிரட்டி இருக்கார்.
முதல் பாதி ரொம்ப மிஸ்டரியா போகும். நடிகர் அருண் பாண்டியனை சுற்றி நடந்த ஒரு சில சம்பவங்களை வைத்தே கதை நகர்கிறது. நல்லா ரொம்ப interestingஆ அதை சொல்லிருக்கார் இயக்குனர். படம் ஆரம்பித்திலிருந்தே பரபரப்பா தான் போகும். ஈந்த மிஸ்டரி எலிமெண்ட்டை சரியாக இரண்டாம் பத்தியில் எலிவேட் செய்தாரா என்பது தான் மீதி கதை. ப்ரீ இன்டெர்வல் பிளாக் ஸ்டண்ட் எல்லாம் வேற ரகத்தில் இருக்கும். அதர்வா பின்னி பெடல்.
குழந்தை கடத்தல் தான் கான்செப்ட் ஆனா அதில் என்ன கொஞ்ச வித்தியாசமா இருக்கு ஸ்டோரி டெல்லிங். எப்படி சாம் அவரோட பழைய படங்களில் நம்மளை என்டேர்டைன் பண்ணினாரோ, அதேபோல் இந்த படத்திலும் continue பண்ணிருக்கார். படம் ஜெயிச்சிருச்சு. இந்த கதை இப்படி எல்லாம் பண்றாங்களா என்று மக்களுக்கு தெரியுமா என்று தெரியல, எங்களுக்கு கொஞ்சம் புதுசா இருந்தது. முதல் பாதியை விட இரண்டாம் பாதி த்ரில்லிங்கா ஒரு satisfying படம் பார்த்த பீல் கொடுக்குது.
Rating: 3/5
Video: