நம்ம அவங்க முன்னாடி மண்டி இடனுமா?? ஆமா அவங்க தான்... த்ரிஷா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
தமிழ் சினிமாவின் சவுத் குயீன் என்றால் கண்டிப்பா அது திரிஷா தான். யாருக்கு வேணும் உங்க லேடி சூப்பர்ஸ்டார் பட்டம், எங்களுக்கு இருக்கு south குயீன் பட்டம் அது போதும் என்று டாப் கியரில் போயிட்டு இருக்காங்க. ஒரு காலத்தில் இனி திரிஷா எல்லாம் அவ்வளவு தான் என்று பேசிய ரசிகர்கள் மத்தியில், இன்னும் என் டைம் முடியலடா என்று மிரட்டி விட்டுட்டு இருக்காங்க.
சமீபத்தில் வெளிவந்த தி ரோடு, பொன்னியின் செல்வன், லியோ போன்ற படங்கள் எல்லாம் ரசிகர்களுக்கும் மற்ற போட்டி நடிகைகளுக்கும் என்ன சொல்கிறது என்றால் இன்னும் இது என்னோட லீக் தான் அதை யாராலயும் அவ்வளவு எளிதில் கைப்பற்றிவிட முடியாது என்று back to back ஹிட்ஸ் மூலம் நிரூபித்து வருகிறார்.
சரி இந்த படம் எல்லாம் ரிலீஸ் ஆயிடுச்சு அடுத்து என்ன என்று தானே கேக்கறீங்க. அடுத்து அஜித் நடிக்கும் விடா முயற்சி கதாநாயகியும் இவங்க தான், உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் thug life படத்தின் கதாநாயகியும் இவங்க தான். அதுபோக பல படங்கள் கையில் இருக்கு. எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் இவங்க தான் உண்மையான லேடி சூப்பர்ஸ்டார்.
எப்போவுமே தோல்வியில் இருந்து பீனிக்ஸ் பறவை போல் எழுவதே ஒரு பயங்கர ஆச்சர்யமான விஷயம் தான். அப்படி அவங்க மீண்டும் வந்துவிட்டால் இணையத்தில் என்னெல்லாம் நாடாகும் தெரியுமா? இந்தியாவின் சினிமா பெரிய நிறுவனமான netflix கூட த்ரிஷாக்கு சிம்ப் பண்ணும். அந்த போஸ்ட் தான் தற்போது இணையத்தில் வைரல்.
Netflix Tweet:
Should we bow? Yes, she's a QUEEN 🙌👑 pic.twitter.com/zQX3UquuSQ
— Netflix India (@NetflixIndia) December 1, 2023