உங்களுக்கு மார்க்கெட் எப்போதும் குறையாது! அதுக்கு இது தான் சாம்பிள்! திரிஷா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்.
பொன்னியின் செல்வன் திரைப்பட ப்ரொமொஷன் வெளியீட்டு விழாவில் மஞ்சள் நிற உடையில் மஞ்சள் நிலாவைப் போல் ஜொலிக்கும் த்ரிஷா கிருஷ்ணன்.
த்ரிஷா, தென்னிந்திய திரையுலகின் முக்கிய நடிகைகளில் ஒருவர். “இவருக்கு வயசே ஆகாதப்பா” என்று ரசிகர்கள்களை பெருமூச்சு விட வைத்திருக்கும் அழகி. 1999 ஆம் வருடம் மிஸ்.சென்னை பட்டம் வென்ற த்ரிஷா சிறு சிறு வேடங்களில் தமிழில் தலைகாட்டி வந்தார். அதன் பிறகு ஷாமுடன் லேசா லேசா, சிம்புவுடன் அலை என்று சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு அவர் விஜயுடன் இணைந்து நடித்த கில்லி திரைப்படம் மெஹா ஹிட்டடித்து அவரது சினிமா வாழ்க்கையையே மாற்றியது.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையானர். தமிழை விட தெலுங்கு திரையுலகம் அவரை கொண்டாடியது.
அவர் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.. பல முன்னனி நடிகர்களுடன் ஜோடி கட்டினார். த்ரிஷாவின் கால்ஷீட் கிடைத்தால் மட்டுமே படம் என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் தமிழரின் வரலாறு சிறப்பு மிக்க காவியம் பொண்ணியின் செல்வனில் முக்கிய வேடத்தில் த்ரிஷா நடித்திருப்பது நாம் அறிந்ததே.
அத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா உட்பட பல விழாக்களில் ரசிகர்களின் கண் முழுக்க த்ரிஷா மேலே இருந்தது. அவ்வளவு அழகாக இருந்தார். தற்போது பட ப்ரொமஷனுக்காக மஞ்சள் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.