ஒரு துளி மேக் அப் இல்லனா கூட த்ரிஷா பேரழகி. action மோட் ஆன். லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
பொன்னியின் செல்வன் த்ரிஷாவை மீண்டும் மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்த்துள்ளது. எல்லாரும் ஏன் அவங்கள இன்னும் சவுத் குயின் அப்டின்னு கூப்பிடுறாங்க தெரியுமா என்பதை மீண்டும் நிரூபித்தார். எங்களை பொறுத்தவரை இவங்க தான் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார், எவ்வளவு வருடம், எத்தனை படங்கள், எவ்வளவு பிளாக்பஸ்டர்ஸ், எல்லா சூப்பர்ஸ்டார்ஸ் கூடவும் படம் பண்ணிட்டாங்க. அதனால தான் இவங்க அந்த டைட்டில்க்கு பொருத்தமானவங்க என்று சொல்கிறோம்..
பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து திரிஷா அடுத்து என்ன பண்ண போறாங்க என்று எல்லாருமே கேட்டுட்டு இருந்த விஷயம் தான். சரியான நேரத்தில் ஒரு அப்டேட் ஓட வந்துட்டாங்க. சோலோ ஹீரோயின் படம் படம். தி ரோடு. இது ஒரு பீரியட் படம். 90ஸ் களில் இந்த படம் செட் செய்யப்பட்டு படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இதில் இவங்க ஒரு action கதாநாயகியா நடிச்சிருக்காங்க.
அந்த புகைப்படம் தான் இப்போ இணையத்தில் வைரல். ஏற்கனவே இந்த படத்தின் அப்டேட்ஸ் வந்தபோது எல்லாம் திரிஷா ட்ரெண்ட் ஆனாங்க காரணம் அவங்க வளவு அழகா இருந்தாங்க, மேக்அப் கூட இல்லாம. ஆமாங்க இந்த படத்தில் திரிஷா ஒரு துளி மேக் அப் கூட போடவில்லை என்று நினைக்கிறோம், ரிலீசான புகைப்படங்களே அதற்கு சாட்சி. இந்த படம் ஆரம்பம் முதலே நல்ல வைப்ஸ் தான் கொடுத்து வருகிறது.
ஒரு சோலோ ஹீரோயின்னா இவங்க ஜெயிப்பதற்கு இந்த படம் வழிவகுக்கும். விரைவில் டீசர் வெளியிட பிளான் செய்துள்ளனர். அறிமுக இயக்குனர் என்றாலும் ரொம்ப க்ளாஸான இயக்குனர் போல தெரிகிறது. படத்தின் ஸ்டில்ஸ் எல்லாம் இதை நிரூபிக்கிறது.
அடுத்து தளபதி 67 படத்தின் கதாநாயகி இவங்க தான்னு ஒரு பேச்சு அடிபடுது. அது உண்மையாக இருந்தால் வேற லெவல் சம்பவம். ரெண்டு போரையும் திரையில் பார்த்து எவ்ளோ வருஷம் ஆச்சு.