உதய் செம்ம action மூடில் இருக்காரு. தரமான படம் அவருக்கு மகிழ் கிட்ட இருந்து. நிதி செம்ம க்யூட். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Udhay magilzh thirumeni movie trailer

இயக்குனர் மகிழ் திருமேனி படம் என்றாலே ஒரு த்ரில் இருக்கும், அந்த த்ரில்லை கடைசி வரை திரைக்கதையில் கொண்டு வந்து அங்கு ட்விஸ்ட் வைப்பதில் கில்லாடி. இவருடைய படங்கள் எல்லாமே வித்தியாசம் தான். அதுமட்டுமில்லாமல் இவர் வைக்கும் ஒவ்வொரு frame-உம் செம்ம சூப்பரா இருக்கும். அதுக்கு ரொம்ப மெனக்கெட்டு எடுப்பார். அதுமட்டுமில்லாமல் கேமரா angles இவர் படத்தில் இருப்பது போல எந்த படத்திலும் பார்க்க முடியாது.

உதயநிதி ரொம்ப சீரியசான படங்கள் எல்லாம் பண்ணிருக்காரு. அதில் எல்லாருக்கு புடிச்ச படம் என்றால் மனிதன் படத்தை கூறலாம். தற்போது அந்த சீரியஸ் மோட் அடுத்த லெவெலுக்கு போயிருக்கிறது. அந்த சீரியஸ் மோடில் கொஞ்சன் action கலந்து இந்த படத்தில் விளையாடியிருக்கிறார். மகிழ் திருமேனி படங்கள் எதுக்கு பேமஸ்சோ அப்படி எல்லாமே இந்த படத்திலும் இருப்பதாய் ட்ரைலரில் கண்டோம்.

Udhay magilzh thirumeni movie trailer

இந்த படத்தில் மிகவும் surprise செய்ததே ஆரவ் தான். பிக் பாஸ் யாராவது சீசன் போய்ட்டு இருக்கு, இவர் முதல் பிக் பாசில் கலந்துகொண்ட கண்டஸ்டெண்ட். படத்தில் ஒரு நல்ல பிரேக் கிடைக்க இவ்வளவு ஆண்டுகள். படத்தில் வில்லனா பண்றாரு. மகிழ் திருமேனி படங்களில் வில்லன் ரோலுக்கு ரொம்ப importance கொடுப்பார். எப்படியும் இறுதியில் அது தான் படத்தின் வெற்றியை நிர்ணயிக்கும்.

இந்த படத்தில் இன்னொரு surprise கண்டிப்பா நிதி அகர்வாலை சொல்லலாம். காரணம் இதுக்கு முன்னர் எல்லாம் லவ்வர் கதாபாத்திரம், கிளாமர் ரோல் தான் பண்ணிட்டு இருந்தாங்க. ஆனால் இந்த படத்தில் கதாநாயகனுக்கு equal screen space இருக்கும் போல இவங்களுக்கு. ஏனென்றால் படத்தின் வில்லன் அப்படி. அவன் தேர்ந்தெடுக்கும் crime பெண்களுக்கு எதிரானது. கண்டிப்பா சம்பவம் பண்ணும் என்று எதிர்பார்க்கிறோம்.

Video:

Related Posts

View all