அமைச்சர் உதயநிதியின் அடுத்த சம்பவம்.. கண்ணை நம்பாதே.. வெறித்தனம்.. வீடியோ வைரல்.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை… ஆடி வா ஆடி வா, இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று, உன் பார்வையில் ஓராயிரம் கவிதையாய் எழுதுவேன் காற்றில் நானே. இப்படி “இரவுக்கு ஆயிரம் கண்கள்” தலைப்பை வைத்து கவிதை கூட எழுதலாம் ரொமான்டிக்கா.
அதுவே இயக்குனர் மு.மாறன் எழுதினால் அது கண்டிப்பா த்ரில்லர் கதைகளா இருக்கும். அப்படி அவர் எடுத்த முதல் படம் தான் இரவுக்கு ஆயிரம் கண்கள். இரண்டாம் படம் கண்ணை நம்பாதே. அந்த படத்தின் ட்ரைலர் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த படம் உதயநிதியின் கடைசி படமாக இருக்கலாம், மாமன்னன் படத்துக்கு முன்.
உதயநிதியின் நடிப்பில் வெளிவரவிருக்கும் “கண்ணை நம்பாதே” திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது.மார்ச் மாதம் 17ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரைலர் முழுக்க விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது போல, அவ்வளவு த்ரில்லிங்கா இருக்கு. இந்த மாதிரி படம் எல்லாம் இவர் தம்பி தான் பண்ணுவார்.
இப்போது இவரும் பண்ண ஆரம்பித்துவிட்டார். கலகத்தலைவன் படமும் இதுபோன்ற த்ரில்லர் படம் தான். உதயநிதி அமைச்சர் ஆன பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம். இதற்கு எதிர்க்கட்சியினர் எந்த மாதிரி விமர்சனம் பண்ண போறாங்க என்று தெரியவில்லை. பெரிய அளவு பாதிப்பு இருக்காது.
Video: