தலைவன் வாய்ஸ் ஒரு வைப் தான். ஜாலியா ஐட்டம் டான்ஸ் ஆடிட்டு இருக்காரு. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
வடிவேலு ‘நாய் சேகர்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரி-என்ட்ரி. அதற்கடுத்து இவரோட லைன்-அப் எல்லாம் வேற லெவல். மாறி செல்வராஜ் மாமன்னன் படத்தில் வடிவேலுவை கம்மிட் பண்ணிருக்காங்க என்றால் நினைத்து பாருங்கள், காமெடியை தாண்டி கண்டிப்பா ஒரு குணசித்திர ரோல் இருக்கும் வயதுக்கு ஏற்ற மாதிரி. இப்போ நை சேகர் படத்தில் கவனம் செலுத்துவோம். வடிவேலு ஜாலியாக இப்படி இருந்து ரொம்ப நாள் ஆச்சு. அவருடைய குரலிலேயே பாட்டு ரெக்கார்ட் பண்ணினது இந்த பாட்டுக்கு செம்ம ப்ளஸ்.
இந்த பாடலை கேட்ட ரசிகர்கள் சென்னையில் மையம் கொண்டிருந்த வைகைப்புயல் காரணமாக மீண்டும் உலகெங்கும் பலத்த காற்று வீசத்துவங்கியுள்ளது என்று பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த பாடலில் அவரோட பாடி language அப்படியே பழைய படங்களில் பார்த்தது போலயே இருக்கிறது. அதே எனர்ஜி. இதற்காகவே இந்த படம் பெரிய வெற்றி அடையும்.
எந்த அரசியல் கட்சித் தலைவரையும் ட்ரோல் பண்ண தலைவன் வடிவேலு காமெடி இல்லாமல் முடியாது. பத்து வருடமா அவர் நடித்த படம் தொடர்ந்து இல்லாவிட்டாலும் இன்று வரை அவர் தான் கிங். தமிழ் சினிமாவில் இவரைப்போல இம்பாக்ட் உருவாக்கின காமெடியன் இருக்கிறார் என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். மெர்சல் படம் மட்டும் இல்லையென்றால் அவர் நடித்து 10 வருடங்கள் ஆகிவிட்டது என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.
ஒரே ஒரு மனிதரின் ஒட்டு மொத்த வசனங்களையும் உலகமே வயது வித்தியாசம் இல்லாமல் ஏழை பணக்காரன் பாகுபாடு இல்லாமல்., அன்றாட வாழ்வில் இணைத்து தினந்தோறும் பேசுகிறது என்றால்., அதான் அந்த மனிதரின் மகத்துவம்..
வடிவேலு தான் அந்த மகத்தான மனிதர். அடிச்சுக்க ஆளே இல்ல.
Video: