அந்த ஒரு கிலிம்ப்ஸ் போதும்.. ஷிவானி செம்ம ஹாட்டு.. வடிவேலுவின் நாய் சேகர் படம். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
காமெடிய மட்டும் எதிர்பார்த்த மாதிரி சரியா வேலை செய்துவிட்டது என்றால் இந்த படம் துணிவு, வாரிசு படம் வர்ற வரை ரொம்ப நல்ல ஓட எல்லா வாய்ப்பும் இருக்கிறது காரணம் வடிவேலுவின் comeback படம். அந்த படத்துக்கு அந்த ஒரு பெயரை தவிர வேற எதாவது மார்க்கெட்டிங் வேணுமா. எப்படி 10 வருசத்துக்கு முன்னாடி போனாரோ, அதைவிட முரட்டு comeback.
அப்போ மெர்சல் படத்தில் நடிச்சார் என்று கேட்காதீங்க, அது விஜயின் வேண்டுகோளுக்கிணங்க நடித்திருக்கிறார். இந்த படம் அவருக்கு அதிகாரபூர்வ comeback . அதுவும் சோலோ ஹீரோ படம். வடிவேலு காமெடியனாக நடித்த போது, அடடா வடிவேலு இருக்கிறார், அப்போ நல்லா இருக்கும் இருக்கும் ஜாலியா சிரிக்கலாம் என்று திரையரங்கிற்கு வந்த கூட்டம் ஏராளம்.
ஏன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கே அவருடைய comeback படமான சந்திரமுகியில் வடிவேலு தேவைப்பட்டார். ரஜினி முதலில் சந்திரமுகி ஸ்கிரிப்ட் படிச்சு முடித்ததும், முதலில் இயக்குனரிடம் சொன்னது வடிவேலுவின் கால் சீட் எவ்வளவு செலவானாலும் வாங்கிடுங்க என்று சொன்னதில் தெரிகிறது வடிவேலு அப்போ எப்படி ரசிகர்களை காமெடியில் கட்டி ஈர்த்தார் என்பது.
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் உருவாகியிருக்கிறது இந்த நாய் சேகர் படம். ஏற்கனவே வடிவேலு சுராஜுடன் படிக்காதவன் படத்தில் வேலை செய்யவேண்டியது, ஆனால் அந்த ரோல் விவேக் செய்தார். பின்னர் ஒரு படத்தில் நடித்தார் விஷாலுடன், அது பெரிதாக போகவில்லை. காமெடிய மட்டும் மனதில் வைத்து உருவாகியிருக்கும் படம், நிறைய நமக்கு பிடித்த நடிகர்கள் வேற நடிச்சிருக்காங்க. நன்றாக இருக்கும் என்று நம்புகிறோம்.
Video: