தலைவனோட அந்த body language தான் அல்டிமேட்.. செம்ம வைபில் இருக்காரு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
வடிவேலு என்னும் மகா நடிகன் நம்மை மீண்டும் என்டேர்டைன் பண்ண இந்த வாரம் வருகிறார். நாய் சேகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி. எந்திரன் ஆடியோ லாஞ்சில் சொல்லிறப்பாரு சூப்பர்ஸ்டார் அந்த இடத்தை விட்டுட்டு கொஞ்ச நாள் படம் நாடிகளை, ரெஸ்டில் இருந்தார், ஆனாலும் அவர் வந்து பார்க்கும்போது கூட அந்த இடம் அப்படியே தான் இருந்தது. அவர் இடத்தை எல்லாம் யாரும் தொட முடியாது என்று.
அந்த வார்த்தைகள் வடிவேலு வாழ்விற்கு சரியாக அமையும். காரணம் அடைந்த 10 வருடங்களில் வடிவேலு அல்லாமல் நிறைய காமெடியன்கள் தமிழ் சினிமாவில் வந்தாலும், வடிவேலு இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. சரி, நானே திரும்ப வர்றேன் என்று வந்துவிட்டார். சமீபத்தில் வெளியான ட்ரைலர் கூட சூப்பர் ஹிட்டு. இந்த படத்துக்கு இசை சந்தோஷ் நாராயணன். இவரின் இசை எப்போதுமே வித்தியாசமா இருக்கும்.
அதேபோல் இந்த படத்தில் அவர் கம்போஸ் செய்த பாடல்கள் அனைத்தும் வடிவேலுவையே பாட வைத்திருக்கிறார். தலைவனோடு வாய்ஸ் அந்த வரிகளுக்கு அப்படி மேட்ச் ஆகுது. இந்த படத்தின் பாடல்களை கேட்டவுடன் நமக்கு மைண்டில் தோணுவது என்னவென்றால் வடிவேலு தவிர யாரு பகிர்ந்தாலும் நன்றாக இருக்காது என்பது தான். அவ்வளவ்ய் கச்சிதமா பொருந்துது.
தற்போது ஒரு பாடல் வந்திருக்கு, அந்த பாடலை விட அந்த பாடலை படும்போது வடிவேலு ஸ்டுடியோவில் செய்த சேட்டை எல்லாம் அவரின் பழைய குறும்புத்தனத்தை, அவர் செய்த காமெடியை எல்லாம் நினைவுக்கு கொண்டு வருகிறது. கண்டிப்பா அடுத்தடுத்து படம் சைன் பண்ணுவார் என்று எதிர்பார்க்கிறோம். மாமன்னன் படத்தில் குணசித்திர ரோல் பண்ணிருப்பார் போல, மாறி செல்வராஜ் படத்தில் காமெடியை ரொம்ப போர்ஸ் பண்ணி வைக்கமாட்டாரு. அதனால் அப்படி தோன்றுகிறது.
Viral: