ராஜா ராணி சீரியல் நடிகை வைஷு சுந்தரின் லேட்டஸ்ட் அவுட்டோர் ஸ்டைலிஷ் போட்டோஷீட் வைரல்.
ஷைஷு சுந்தரின் லேட்டஸ்ட் அவுட்டோர் ஸ்டைலிஷ் போட்டோஷீட். வைஷு சுந்தர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பணிபுரியும் மாடல் மற்றும் நடிகை ஆவார். அவர் ஸ்டார் விஜய்யில் ராஜா ராணி 2 சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். அவர் அத்தொடரின் நாயகன் (சரவணன்) சித்துவின் தங்கையான பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஆல்யா மானசாவுடன் இணைந்து நடித்தார்.
முதலில் நெகட்டிவ் கதாபாத்திரமாக இருந்த கேரக்டர் பின்பு பாஸிடிவ்வாக மாற்றப்பட்டது. ராஜாராணியே இவரது முதல் திரைபயனமாக கருதப்பட்டது.
பொதுவாகவே சீரியல்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்கள் நடிக்கும் நடிகைகளை பார்வையாளர்கள் திட்டுவது வழக்கம். ஆனால் அதற்கு மாறாக வைஷுவை சோசியல் மீடியாவில் கொண்டாட ஆரம்பித்தனர் ரசிகர்கள்.
குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமானார் வைஷு சுந்தர். க்ரஷ் மெட்டிரியல் என பலராலும் கொண்டாடப்பட்டார். இப்பொழுது அவர் கதாபாத்திரம் பாஸிட்டிவாக மாற்றப்பட்ட பிறகு மேலும் வரவேற்பை பெற்றார். அதைத்தொடர்ந்து மேலும் ஒரு சில சீரியல்கள் மற்றும் படங்களில் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வருகிறது.
சமீபத்தில் மலைப்பிரதேசங்களில் போட்டோஷுட் செய்திருக்கிறார் வைஷு. கிளைமேட்டிற்கு ஏற்றவாறு ஜில்லென இருக்கும் வைஷு கேஷுவலாக இளைஞர்களை கவர்ந்து விட்டார்.