கோலிவுட்டுக்கு புது ஹீரோயின் என்ட்ரி.. விஜய் ஆண்டனி கூட செம்ம ரொமான்ஸ். வள்ளிமயில் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Vallimayil movie update vijay faria

சுசீந்திரன் மாதிரி வேகமாக படத்தை எடுத்து முடிக்கும் இயக்குனரை பார்த்ததில்லை. சிம்புவை வெச்சு ஈஸ்வரன் படம் எடுத்ததற்கு பின்னர் அடுத்தடுத்து ஒரே ஆண்டில் மூன்று படங்களை முடித்துள்ளார். குற்றம் குற்றமே, வீரபாண்டியபுரம் போன்ற படங்கள். இதை முடித்துவிட்டு தற்போது விஜய் ஆண்டனியை வைத்து வள்ளிமயில் என்ற படம்.

எப்படி இவ்வளவு வேகமாக ஸ்கிரிப்ட் எழுதி எடுக்கிறார் என்பதில் சரியான ஆச்சர்யம். மேலும் அவர் கடைசியாக எடுத்த படங்கள் எதுவும் பிரமாண்ட பொருட்செலவில் எடுத்த படங்கள் இல்லை, எல்லா படமும் மண்சார்ந்த எடுக்கப்பட்டவை கிராமத்திலோ, மலையிலோ ஷூட்டிங் வைத்து முடிக்கப்பட்டிருக்கிறது. இதில் குற்றம் குற்றமே படத்தை கொஞ்ச நாட்களில் முடித்தார் என்றாலும் தரமாக எடுத்திருப்பார், நல்ல ஒரு த்ரில்லர்.

இதனால் தற்போது இவர் எடுக்கும் வள்ளிமயில் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. விஜய் ஆண்டனி எப்படியும் ஸ்கிரிப்ட் நன்றாக இருந்தால் மட்டுமே செலக்ட் செய்வார், அதனால் ரசிகர்களுக்கு அவர் சூஸ் செய்யும் சப்ஜெக்ட் மீது நம்பிக்கை உண்டு. ஓ விஜய் ஆண்டனி படமா.. போர் அடிக்காது.. வாங்க போய் பார்த்துட்டு வரலாம் என்ற அளவுக்கு பெயர் சம்பாதித்து வைத்திருக்கிறார். புது ஹீரோயின் பரியா அப்துல்லா, இந்த படம் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆகிறார். தெலுங்கில் இவரின் முகம் நல்ல பரிட்சயம். அந்த போட்டோஸ் தான் தற்போது இணையத்தில் வைரல்.

ரத்தம், கொலை, வள்ளிமயில் என்று விஜய் ஆண்டனிக்கு நல்ல லைன்அப்.

Latest Photos:

Related Posts

View all