கதாநாயகியை தேர்ந்தெடுக்கிறார் பாருங்க பாலா.. ரசிகன் யா.. வணங்கான் லேட்டஸ்ட் கிளிக் வைரல்.

Vanangaan first look viral

ஜெயமோகன் எழுதிய சிறந்த சிறுகதைகளில் ஒன்று வணங்கான். அந்த டைட்டிலில் வரும் படம். ஒரு கையில் பெரியாரும் ஒரு கையில் பிள்ளையாரும். பாலாவின் நாயக பிம்பம் கோரும் உழைப்பை அசராமல் கொடுக்கக்கூடியவர் அருண் விஜய். கதையின் மூடுக்கு ஏற்ற பாடல்கள் தரக்கூடியவர் ஜிவி பிரகாஷ். எதிர்பார்ப்பை தூண்டி இருக்கும் படம்.

எல்லாருக்கும் தெரியும் பாலா எவ்வளவு பெரிய இயக்குனர், அவர் படங்கள் எப்படி இருக்கும் என்று. அதேபோல இந்த படத்தில் புதிதாக அரசியல் பேசவுள்ளார் என்று தோன்றுகிறது. எப்போதுமே அவரது படங்களில் அரசியல் இருக்கும் ஆனால் அதை ஆராயும் போது தான் தெரியும். இப்போ பாருங்க வெளிப்படையா முதல் பார்வையிலேயே வெச்சுட்டாரு.

Vanangaan first look viral

இன்னைக்கு இணையதளம் முழுவதும் இது தான் debate. அப்பள அரசியல்வாதிகள் இந்த படத்தை ரிலீஸ் செய்யவே விடக்கூடாது, ரொம்ப ஆபத்து என்று படத்துக்கு விளம்பரம் தேடிக்கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அனலை ஒன்னு சொல்ல வேண்டும், பாலாவின் தைரியம் தைரியம் தான். தினசரி அந்த டாபிக் தான் அரசியலே, அதையே அடிச்சு நொறுக்கிட்டாரு.

இந்த படகில் முன்னாடி கீர்த்தி ஷெட்டி தான் கதாநாயகியா நடிக்கவிருந்தது ஆனால் சூரிய வெளிய போனவுடன் அவங்களும் போய்ட்டாங்க. இப்போ புதுசா ரோஷினி பிரகாஷ் என்ற கதாநாயகியை தேர்ந்தெடுத்து நடிக்கவெச்சிருக்காரு. கண்டிப்பா இது அவங்களுக்கு பெரிய பூஸ்ட்டா இருக்கும். அவரிடம் நடிப்பது கஷ்டம் ஆனால் நடித்துவிட்டால் விருது confirm.

Related Posts

View all