ஏதே எந்த வயசுல பிட்டு படம் பாத்தீங்களாவா? அம்மா என்ன பாடம் அது. வரலாறு முக்கியம் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
இந்த வார 2 ரிலீஸும்😷
ஜீவா எப்படியோ வர வேண்டிய ஆள் ஆனா இப்ப மொக்கை படங்களா குவிச்சு தள்ளுறார். வரலாறு முக்கியம் மேக்கிங் & ப்ரோமோலாம் B- Grade ரகம். தற்போது ரிலீசான ஸ்னீக் பீக் கூட அப்படி தான் இருக்கிறது. ஜீவாக்கு இருக்கிற potential ஒரு சில நடிகர்களுக்கு எல்லாம் இல்லை, ஆனால் ஏன் இவருக்கு இதுபோன்ற காதிங்களே அமையுது என்று தெரியவில்லை. தயாரிப்பாளரின் மகன் வேற, நிறைய கதைகள் சொல்ல இயக்குனர்கள் போட்டி போடுவாங்க ஆனாலும் இன்னும் அந்த பிரேக் கொடுக்கிற மாதிரி கதைகள் ஏன் நடிக மாட்டீங்கிறார் என்று தெரியவில்லை.
ஒரு பெரிய தயாரிப்பாளரோட புள்ளையா இருந்தும் ஒரு பெரியடைரக்டர் கூட சூப்பர் கதைல கம்பேக் கொடுக்கணும்னு முயற்சி கூட பண்ற மாதிரி தெரியல. வடிவேலு நடிச்சு ஒரு சிரிக்க வைக்கிற காமெடி கூட இல்லாத அதே சமயம் எரிச்சலூட்டுற பாணில சீன்ஸ் வச்சு ஒரு படம். ப்ரோமோல கூட சிரிப்பு வரலையேடா டைப்ல இருக்கு நாய் சேகர். கெட்டப்பும் ப்ரோமோவுமே ஆடியன்ஸை தியேட்டர் பக்கம் வர வைக்காது போலயே. இப்படி தான் தோன்றுகிறது. லைக்கா இன்னைக்கும் நாளைக்கும் எதாவது தரமான ப்ரோமோ ரிலீஸ் செய்து விட்டால் தான் உண்டு.
ஜீவா கிட்ட இருந்து மக்கள் எதிர்பார்ப்பது என்றென்றும் புன்னகை, SMS, கோ போன்ற படங்கள் தான், ஆனால் அவருக்கு ரொம்ப cringe படங்களாகவே அமையுது. முன்னாடி மாதிரி அவரால தரமான கதைகளை செலக்ட் செய்து நடிக முடியவில்லை என்று தான் தோன்றுகிறது. selection-ல தான் மனுஷன் தப்பு பண்றாரு. ஆனால் அவர் நடித்த கடந்த சில படங்களில் ஒரு நல்ல படம் என்றால் ஜிப்சி தான், ஆனால் அதற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
Experiment படமாக இருந்தால் கூட அதில் கொஞ்சம் என்டேர்டைன்மெண்ட் factor இருந்தால் தான் திரையரங்கு பக்கம் ஒதுங்குவாங்க, அதுவும் மழைக்காலம் வேற, பேமிலி ஆடியன்ஸ் எல்லாம் வர்றது கஷ்டம். கன்டென்ட் நல்லா இருந்தால் தான் வருவாங்க. ஒரு படத்துக்கு நல்ல ப்ரோமோஷன் ட்ரைலர் தான், ஆனால் கிரிஸ்பா இரண்டு கட் கூட இல்லை என்பது சோகமான விஷயம்.
Video: