ஆஹா இந்த படத்தில் ஜீவா புகுந்து விளையாடிருப்பார் போல. வரலாறு முக்கியம் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
காபி வித் காதல் படத்துக்கு அப்புறம் ஜீவா அவரோட அடுத்த படத்தை வெளியிட தயாராகிவிட்டாரு. ஒரு தயாரிப்பு நிறுவனம் 100 படங்களை நோக்கி நகர்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய நிறுவனமாக இருக்கும். அதுதான் ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ். அவரோட பையன் தான் ஜீவா. இந்த படம் அவங்களுக்கு 92வது படம். இந்த படம் ஜீவாக்கு பெரிய ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னட என முக்கிய மொழிகளில் இவங்க தான் படம் பண்ணிட்டு இருக்காங்க அப்படிங்கிறது ஒரு பெருமையான விஷயம்.
ஜீவா கிட்ட இருந்து ஆடியன்ஸ் expect கோ, என்றென்றும் காதல், SMS போன்ற படங்கள் தான். அவருக்கு அதுபோல படம் இன்னும் அமையவில்லை. இந்த படம் அந்த வரிசையில் சேர்ந்து அவருக்கு ஒரு முரட்டு ஹிட்டாக மையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஜீவாக்கு இரண்டு ஜோடிகள். ஒருத்தங்க பிரக்யா, இன்னொருத்தங்க காஷ்மீரா. இருவருமே செம்மயா நடிப்பாங்க.
ஒரு படத்துக்கு பெரிய hype உருவாக்குவதே அந்த படத்தில் வரும் ரொம்ப இன்டெரெஸ்ட்டிங் சீன்ஸ் எல்லாம் வெச்சு தரமாக எடிட் செய்வது தான். அதற்கு எடுத்துக்காட்டு சமீபத்தில் வந்த லவ் டுடே படம். அந்த படம் எடுக்கும்போது பெரிய hype இல்லை, ஆனால் எப்போது ட்ரைலர் வந்ததோ அப்போ இருந்து செம்ம வரவேற்பு. 5 கோடி தான் பட்ஜெட், ஆனால் படம் 50 கோடிக்கு மேல் வசூல். இதைத்தான் இயக்குனர்கள் பாலோ செய்யவேண்டும்.
ஜீவா ஒரு சூப்பரான versatile நடிகர், சரியான கதை மட்டும் திரைக்கதை மையும்போது அவரை யாராலும் தடுக்கமுடியாது. அது தான் அவருக்கு ஒரு சில படங்களாக அமையவில்லை, நிலைமை இப்படியே இருக்காது. கண்டிப்பாக காட்சிகள் மாறும். comeback கொடுப்பார்.
வீடியோ: