விஜய் சும்மா நடிச்சாலே 300 கோடி அசால்ட்டா வசூல் பண்ணுது.. அப்போ லியோ எல்லாம்? அறிவிப்பு செய்த தயாரிப்பு நிறுவனம். முழு விவரம்.

Varisu hits 300c worldwide

விஜய் நீண்ட நாள் களைத்து ஒரு பேமிலி சப்ஜெக்ட் பண்ணிருக்காரு, அது தான் வாரிசு. இந்த படம் விஜய் ரசிகர்கள் 70% சதவீதம் தான் திருப்தி படுத்துச்சு. ஏனென்றால் இந்த காலத்து பசங்களுக்கு பேமிலு சப்ஜெக்ட் என்றாலே cringe, நாடகம் என்று சொல்லிடுவாங்க. அதுவும் வாரிசுன்னு பெயர் வெச்சுட்டு அந்த படத்தில் வேற என்ன எதிர்பார்க்கமுடியும்.

ஆனால் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்துக்கு ஒரு சரியான மீட்டர் ஒன்னு செட் பண்ணாங்க. அதாவது ட்ரைலர் ரிலீஸ் பண்ணும்போதே படத்தில் இது தான் இருக்கப்போகிறது என்று. அதேபோல அவங்க சொன்னதை விட கொஞ்சம் அதிகமாகவே இருந்துச்சு என்று கூட சொல்லலாம். அதனால் தான் இந்த படம் இன்னும் நல்லா ஓடிட்டு இருக்கு.

Varisu hits 300c worldwide

25 நாள் கடந்தும் கூட நல்லா ஓடிட்டு இருக்க காரணம் இது தான். எந்தவொரு நடிகரும் அதாவது பெரிய நடிகர்கள் பேமிலி சப்ஜெக்ட் தொட்டால் இது தான் விளைவாக இருக்கும். கொஞ்சம் பிசிறு தட்டி இருந்தாலும் இந்த படம் மிகப்பெரிய பிளாப்பா இருந்திருக்கும். தற்போது தரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக படத்தின் வசூல் 300 கோடி என்று சொல்லிட்டாங்க.

70% சதவீதம் மக்களை திருப்தி செய்த இந்த படமே இவ்வளவு வசூல் செய்கிறது என்றால், அடுத்த படம் ப்ராப்பர் பான் இந்தியா படமாக எடுக்கப்படுகிறது. அப்போ என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள். அதுவும் இப்போ தமிழ் சினிமா எதிர்பார்க்கும் பெரிய படம் என்றால் அது லியோ தான். சமீபத்தில் வந்த படத்தின் கிலிம்ப்ஸ் கூட 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துவிடும் போல.

Tweet:

Related Posts

View all