வாரிசு படம் 150 கோடி வசூல் செஞ்சிருச்சு.. தயாரிப்பாளரே சொல்லிட்டாரு வேற என்ன வேணும்.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
இந்த பொங்கல் யாருக்கு நல்லது நடந்துச்சோ இல்லையோ, திரையரங்கு உரிமையாளர்கள் அனைவர்க்கும் செம்ம பொங்கல், எல்லாருமே ரொம்ப சந்தோசமா இருப்பாங்க. ஏனென்றால் ரிலீசான இரண்டு பமுமே செம்மயா ஓடிட்டு இருக்கு திரையரங்கில். கூட்டம் அப்படியே பொங்கி வழியுது. அதனால் எல்லாருமே ஹாப்பி. நேற்று வாரிசு படத்தின் தேங்க்ஸ் கிவ்விங் மீட் கூட நடந்துடுச்சு.
தெலுங்கு தயாரிப்பாளர் ஒரு ட்ரெண்ட் செட் பண்ணி இருக்கார் தமிழ்நாட்டில். அது என்னென்னா தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திரமான விஜய், அஜித், ரஜினி படங்கள் எல்லாம் நல்லா ஓடினால் அவ்வளவு தான், வசூல் வந்துவிட்டது என்று அடுத்தடுத்து படங்கள் பண்ணிட்டு போயிட்டே இருப்பாங்க. நடிகர்களும் அப்படியே. ஆனால் இப்போ நடப்பதே வேறு.
படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே, நன்றாக வசூல் ஆனதை முன்னிட்டு நேற்று அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனமே அறிவிச்சுட்டாங்க. உலகம் முழுவதும் 150 கோடி வசூல் செஞ்சிருச்சு அப்டின்னு. அதுமட்டுமில்லாமல் பிரஸ்/மீடியா அனைவரையும் சந்தித்து அவங்களோட சப்போர்ட்க்கு நன்றி தெரிவித்து ஒரு மீட். மீண்டும் 25ம் தேதி சந்திக்கிறாங்களாம்.
இந்த நிகழ்வு எல்லாம் தமிழ்நாட்டில் சின்ன படங்களுக்கு நடந்திருக்கு, ஆனால் விஜய் படத்துக்கோ மற்றவர்கள் படுத்துக்கோ நடந்த மாதிரி தெரியல. இதற்குப்பின் நிறைய சம்பவங்கள் நடக்கலாம். இதுவரை துணிவு படத்தின் வசூல் எவ்வளவு என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை. அதுவும் 150 கோடியை கடந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜயின் ஆவெரேஜ் படமீ இப்படி போகுது என்றால் அதுவும் கிளாஸ்ல. சோலோ ரிலீஸ் எல்லாம் ஆகியிருந்தால் இன்னேரம் 200 கோடியை கடந்திருக்கும்.