வாரிசு படத்தின் விஜயே சொல்லும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி அந்த காட்சி ரிலீஸ் பண்ணிருக்காங்க. வீடியோ வைரல்.
எப்படியோ வாரிசு, துணிவு படங்கள் clash முடிஞ்சிருச்சு. இரண்டு மாதமா இவங்க இரண்டு பேரை வைத்து மட்டுமே சம்பாதிச்சிட்டு இருந்தவங்க இப்போ அடுத்து என்ன பண்ண போகிறோம் என்று யோசிச்சுட்டு இருப்பாங்க. ஆனால் இந்த படம் இரண்டுமே வசூல் ரீதியாக நல்லா தான் போயிட்டு இருக்கு. தமிழ்நாட்டில் துணிவு படமும், உலக வசூலில் வாரிசு படமும் நம்பர் 1 இடத்தில இருக்கிறது.
வாரிசு படத்துக்கு ஏகப்பட்ட எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அதே அளவுக்கு பாசிட்டிவ் விமர்சனங்களும் வருகிறது. நிறைய பேர் குடும்பம் குடும்பத்தை வந்து பார்க்கின்றனர். இதுவொரு ஜாலியான விஜய் படம். விஜய் என்றாலே குசும்பு தான், ஆனால் அதை அவர் வெளிப்படுத்த இவ்வளவு ஆண்டுகள் ஆகியிருக்கு. அதனால தான் vintage விஜய் இஸ் back என்று சொல்லுறாங்க.
ரொம்ப எளிமையான குடும்பம் கொண்டாட இந்த பொங்கல் திருநாளில் எடுத்த படம் தான் வாரிசு. ரொம்ப பிரமாண்டமான வீடு அதில் இருக்கும் அம்மா பசங்க அப்பா செண்டிமெண்ட். இவ்வளவு பணக்காரங்களாக காட்டினால் மக்கள் எப்படி எமோஷன்ஸ் உடன் கனெக்ட் ஆவாங்க என்று நினைக்கலாம், ஆனால் எமோஷன் ஒன்னு தானே.
சின்ன குடும்பமோ, பெரிய குடும்பமோ அவங்களுக்கும் அம்மா, அப்பா, குழந்தைகள் என்று எல்லாரும் இருப்பாங்க தானே. ரொம்ப கலர்புல்லா இருந்ததால் இது மற்ற விஜய் படத்திலிருந்து இது மிகவும் புதிதாகவே இருந்தது. ராஷ்மிக்கா விஜய் சேர்ந்து இன்னும் நிறைய படங்கள் பண்ண வேண்டும். லவ் காட்சிகள் அவ்வளவு நல்லா இருக்கு. விஜய்க்கும், யோகி பாபுக்கும் ஆன அந்த கெமிஸ்ட்ரி சூப்பரா ஒர்கவுட் ஆகியிருக்கு காமெடில.
அந்த வீடியோ: