வாரிசா துணிவா? இவர் எப்போவும் விஜய் ஆப்போசிட்டா தான் பேசுவாரு.. சவுக்கு சங்கர் வீடியோ வைரல்.
அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பற்றி அனைவர்க்கும் தெரியும். புலனாய்வு புலி என்று எல்லாரும் இணையதளத்தில் செல்லமாக கூப்பிடுவாங்க. அதே பெயரை வைத்து இவரை ட்ரால்-ம் பண்ணுவாங்க. அப்படிப்பட்ட இவருக்கு நிறைய எதிர்ப்புகள் தினம் தினம் ஆளுங்கட்சியினரிடம் இருந்தே வரும்,அதற்கெல்லாம் அவருடைய விமர்சனங்களை வெச்சுட்டே இருப்பாரு.
சமீபத்தில் தான் ஆளுங்கட்சி ஆட்களை பற்றி தவறாக பேசியதால் ஆறு மாதம் ஜெயிலுக்கு எல்லாம் போயிட்டு வந்தாரு. அதற்குப்பின் இவர் வாழ்க்கையே மாறிடுச்சு, முந்தையதை விட இப்போ பல மடங்கு உக்கிரமா ஆளுங்கட்சியை எதிர்த்து வருகிறார். அதுவும் உதயநிதி ஸ்டாலினை பயங்கரமான எதிர்ப்பு, அவர் அமைச்சர் ஆனது முதல் இன்று வரை கடுமையான விமர்சனம் தான்.
மேலும், தற்போது வாரிசு, துணிவு படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆச்சு. துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலின் ரிலீஸ் செய்வதால் அந்த படத்தை சவுக்கு முன்பு இருந்து ஆதரிக்கவே இல்லை. எப்போதுமே விஜய்யை எதிர்க்கும் சவுக்கு இந்த படத்தில் விஜய்க்கு பயங்கரமா சப்போர்ட் செய்றாரு. இது திடீர் என்று விஜய் மேல் வந்த மரியாதையா ஆளுங்கட்சி மீது மறைமுக தாக்குதலா என்று தெரியவில்லை.
இரண்டு படமும் ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு. என்ன வாரிசு படம் உலக வசூலை எடுத்து பார்க்கும் போது துணிவு படத்தை விட நிறைய வசூல் பண்ணிருக்கு என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். இதுவரை விஜய் பேமிலி சப்ஜெக்ட் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு, தொட்டார் படம் ஹிட்டு. ஒரு சிலருக்கு disappoint பண்ணிருந்தாலும் குடும்பங்களுக்கு பிடித்து விட்டது.
சவுக்கின் பதில்:
Thunivu ( or) Varisu ..?#Varisu Than ♥️💥@actorvijay pic.twitter.com/CmK6w6bMwZ
— Deepa Vijay ツ (@Deepa_0ff) January 20, 2023