தளபதி வந்தாலே ரெக்கார்டு தான் போல.. எல்லாத்தையும் அடிச்சு தூக்கிடுச்சு வாரிசு ட்ரைலர். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
எல்லாரும் எதிர்பாத்துட்டு இருந்த வாரிசு ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி செம்ம வைரல். விஜயின் புகைப்படம் வந்தாலே அப்படி கொண்டாடுங்க. இப்போ அவங்களுக்கு ஒரு புல் மீல்ஸ் கிடைச்சிருக்கு விடுவார்களா. அதுவும் நேற்று வீக் டே எப்படி தான் இவரோட படத்துக்கு மட்டும் இப்படி வியூஸ் அல்லுதோ தெரியல. இப்போ தான் பொங்கல் பொங்கல் மாதிரி இருக்கு.
தற்போது ட்ரைலருக்கு வருவோம். படம் குடும்ப படம். அந்த படத்தில் என்னென்ன surprise இருக்கு அப்டிங்கிறத வெச்சு தான் படத்தோட வெற்றி தோல்வி இருக்கு. இந்த ட்ரைலரின் என்ன பாசிட்டிவ் என்றால் இது தாண்ட கதை என்று சொல்லிட்டாங்க. பீஸ்ட் ட்ரைலர் மாதிரி ரொம்ப ஹை கொடுத்து படத்தில் disappoint இப்போ வரைக்கும் பண்ணல. படம் எந்த மீட்டரில் இருக்கும் என்பதற்கு இந்த ட்ரைலர் சான்று.
வம்சியோதா மிகப்பெரிய ப்ளஸ் எமோஷன்ஸ் தான் மற்றும் பிரமாண்டம். நல்ல தாராளமா தயாரிப்பாளர் கிட்ட காசு வாங்கி செல்வது செஞ்சு எடுப்பார். அது எல்லாம் தெரிகிறது ஒவ்வொரு காட்சிகளிலும். விஜய் பயங்கர swagஆ இருக்காரு. ஒரு ஜாலியா ஊர் சுத்திட்டு இருந்த பையன் எப்படி குடும்பத்தில் ஒரு பிரச்சனை அப்டின்னு சொன்னவுடனே அதை டீல் செய்கிறார் என்பது தான் கதை.
என்னடா இது ரொம்ப வழக்கம் போல வந்த கதை தானே அப்படிங்கிற பீல் வந்தாலும். விஜய்க்கு இது புதுசு. அதனால் பேமிலி ஆடியன்ஸ் கண்டிப்பா இந்த படகுக்கு போக நிறைய வாய்ப்பு இருக்கு. பின்னர் நேற்று வாரிசு ட்ரைலர் வரும்போதே துணிவு ரிலீஸ் தேதியும் வந்திடுச்சு 11ம் தேதி ரிலீஸ் பண்றாங்க. நீ ஓடுனா மட்டும் விட்ருவோமா நாங்களும் 11ம் தேதி வர்றோம் என்று வாரிசு படக்குழுவினரும் அறிவிச்சிருக்காங்க.
இந்த பொங்கல் செம்ம கிளாஸ் இருக்கு.
Video: