என்னமா தளபதி பொங்கல்ன்னு அறிவிச்சுடலாமா? மனுஷன் இறங்கு நடிச்சிருக்காரு.. ஆட்டநாயகன். வாரிசு முழு விவரம்.
![Varisu vijay movie review](/images/2023/01/11/varisu-movie-review-1-.jpg)
தளபதி விஜய் நடிப்புல வெளியாகியிருக்கும் வாரிசு படத்தின் review தான் பார்க்கப்போறோம். சமீப வருடங்களில் வந்த விஜய் படங்களிலேயே இந்த படத்துக்கு தான் எதிர்பார்ப்பு ரொம்ப கம்மி, அதனால் தான் எப்போவும் போல விஜய் பட ட்ரைலர் கூட பெரிய அளவு போகவில்லை. ஆனால் இது எப்படியோ படகுக்கு ரொம்ப பாஸிட்டிவா அமைஞ்சிருச்சு.
Complete family entertainment, and it’s an அவுட்- Vijay Show. செம்மை richness ஒவ்வொரு காட்சியிலும். குறிப்பாக உடைகள். நேர்த்தி(pocket squar,3 piece முதற்கொண்டு) பணக்கார குடும்பத்தின் கடைக்குட்டிக்கான அத்தனை துள்ளலோடு ஜாலியாக விஜய் நடித்திருக்கும் படம். விஜய் டைமிங் ஜோக்குகள் நன்றாக எடுபடுகின்றன. யோகிபாபுவே, என்னைய கவுண்ட்டர் சொல்ல விடுப்பா என சொல்லும் அளவு. அம்மி அம்மி மிதித்து, குடும்பங்கள் கொண்டாடும் என விஜயே கலாய்த்துக்கொள்ளும் சீரியல் செண்ட்டிமெண்ட் தான். ஆனால் அதை இறங்கி அடித்தவிதத்தில்,வெற்றி. செம ஓட்டம் ஓடும்.
![Varisu vijay movie review](/images/2023/01/11/varisu-movie-review-2-.jpg)
இதுவரை இப்படி பாசிட்டிவ் விமர்சனங்கள் விஜய் படத்துக்கு வந்ததே இல்லை. எப்போவுமே mixed விமர்சனங்கள் தான் வரும், ஆனால் பாருங்களேன் இந்த படத்துக்கு முழுமையான பாசிட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே. அதுமட்டுமில்லாமல் production சைடுல இருந்து பெரிய அளவு ப்ரோமோஷன் கூட பண்ணல, இயக்குனரே நேற்று தான் இன்டெர்வியூ கொடுத்தாரு. இப்படி இருக்க படம் ஜெயித்தது பெரிய ப்ளஸ்.
கண்டிப்பா குடும்பம் குடும்பமா வந்து பாக்குறாங்க, முதல் காட்சியே இது தான் இந்த படத்துக்கு கிடைத்த வெற்றி. படத்தில் குறையே இல்லையா என்றால் இருக்கு. கண்டிப்பா இருக்கு. ஒரு 10 நிமிடம் கூட கம்மி பண்ணலாம். இசை படகுக்கு பெரிய ப்ளஸ், தமன் அவரோட பேன் பாய் மொமெண்ட்ஸ் காட்டிருக்காரு. சும்மா வெறித்தனமான சம்பவம் அது. இந்த வருடத்தின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டரா இருக்கப்போகுது. பீஸ்ட்ல விட்டதை ட்ரிபிளா கொடுத்திருக்காரு.
ரேட்டிங்: 3.75/5