என்னடா இப்படி மிரட்டி வெச்சுருக்கீங்க. சஞ்சனா செம்ம க்யூட் ஆனா ட்விஸ்டு. எஸ்.ஜே.சூர்யா கொல மாஸ். வதந்தி வீடியோ வைரல்.
விக்ரம் வேதா இயக்குனர்களான புஷ்கர் - காயத்ரி இருவரும் தற்போது தயாரிப்பில் இறங்கிட்டாங்க. சமீபத்தில் இவங்க தமிழில் எடுத்த விக்ரம் வேதா படத்தையே ஹிந்தியில் எடுத்து அங்கும் செம்ம ஹிட் ஆனது. இவங்க அமேசான் நிறுவனத்துடன் ஒரு டை-அப் பண்ணிருப்பாங்க என்று நினைக்கிறோம், இவங்க தயாரிக்கும் படங்கள், சீரிஸ் எல்லாம் அமேசானுக்கே போகுது. மேலும் தற்போது மீண்டும் ஒரு வெப் சீரிஸ்.
வெப் சீரிஸ் கலாச்சாரம் தலைதூக்கி இருக்கிறது. எஸ்.ஜே. சூர்யா வரைக்கும் வந்துவிட்டது என்றால் விஜய், அஜித்தை வைத்தே ஒரு வெப் செரிஸ் எடுத்திடுவாங்க போல. சினிமாவின் அழிவு ஆரம்பமா என்று தெரியவில்லை. ஒரு சில நல்ல படங்கள், இப்படி சொலலாம் நல்ல கதைகள் இவர் ஹீரோவாக நடித்தால் ஓடும் ஆனால் பெரியாத்திரையில் அந்தளவு வரவேற்பு இருக்குமா என்ற சந்தேகத்தில் இருக்கும் இயக்குனர்களுக்கு இது சரியான பிளாட்பார்ம்.
வெப் செரிஸ் போல எடுத்தால் யாரும் குறை சொல்லமாட்டாங்க படம் ரொம்ப நீளமாக இருக்கிறது என்று. தற்போது எஸ்.ஜே.சூர்யா வதந்தி என்ற சீரிஸ் பண்ணிருக்காரு. எப்போதுமே வித்தியாசமான கதைகளை சூஸ் செய்து நடிக்கும் இவருக்கு, இந்த தொடரும் செம்ம challengingஆ இவருக்கு இருந்திருக்கும். ஒரு கொலையை இன்வெஸ்டிகடே பண்ண வரும் போலீஸ் ஆபிஸரா வர்ராரு. மாநாடு படத்தில் அவருக்கு இருந்த கெட்டப் விட இந்த சீரிஸில் இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கு.
நிறைய ரீல்ஸ் எல்லாம் பின்னி தனக்குன்னு ஒரு பேன் பேஸ் வைத்திருக்கும் சஞ்சனா தான் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரம். இவரை சுற்றி தான் கதையே நடக்கிறது. நாசர், லைலா, ஸ்ம்ருதி வெங்கட், விவேக் பிரசன்ன ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூழலை தொடர்ந்து அடுத்த ஹிட்டுக்கு ரெடி ஆயிடுச்சு அமேசான் prime.
வீடியோ: