இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவான்னு கேட்டாங்க. *த்தா நடிகன்டானு காமிச்சுக்கிட்டு இருக்கார் எஸ்.ஜே.சூர்யா. முழு விவரம்.
உண்மையான குடிபோதைக்கும், குடித்த மாதிரி நடிக்கும் போதைக்குமான வித்தியாசத்தை இத்தனை நுணுக்கமாக எந்த நடிகரும் வெளிப்படுத்தியதில்லை. தானும் சிறந்த நடிகன் தான் என்று எஸ்.ஜே.சூர்யா நிரூபித்த தினம் எப்போது கார்த்திக் சுப்புராஜின் இறைவி படம் ரிலீஸ் ஆனதோ அன்று. அன்று முதல் இவருக்கு ஏறுமுகம் தான். ஒரு சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை என்றாலும், படத்தில் இவரது நடிப்பு கடைசி வரை ரசிக்கும்படியே இருக்கு. அப்படியொரு மகா கலைஞன்.
இது கவிதையல்ல., என் கதாபாத்திரம்.! நடிப்பே என் கதை, துடிப்பே என் திரைக்கதை, வெடிப்பே என் வசனம், அடிப்பே என் இயக்கம்., என்று ஒவ்வொரு அடியாய் வாங்கி நிற்கும் நடிகன் எனும் ஆலமரம்.! போடுகின்றேன் உமக்கு ஜே.! எஸ்.ஜே.சூர்யா அவர்களே.!
அமேசான் prime நிறுவனம் தற்போது நிறைய நல்ல வெப் சீரிஸ்களை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் இவரை வைத்து எடுத்த வெப் சீரிஸ் தான் “வதந்தி”. இந்த தொடரில் வர தான் ஹீரோ. போலீஸ் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். வரும் நவம்பர் 2 அன்று வெளியாகிறது. பார்ப்பதற்கு போலீஸ் கெட்டப்பில் அருமையாக உள்ளார். மாநாடு படத்தில் எப்படி ஒரு சீரியஸ் மோட் இருந்ததோ அதேபோல் தான் இந்த தொடரும் இருக்கப்போகிறது. அடுத்த என்ன என்ன என்ற தேடல்.
சமீபத்தில் வெளியான சூப்பர்ஹிட் படமான கொலைகாரன் படத்தை எடுத்த இயக்குனர் தான் இந்த சீரிஸ் இயக்கலானார். அந்த படமே பார்ப்பதற்கு அவ்வளவு கிளாஸாக இருந்தது. அதனால் இந்த தொடரும் அதைபோலயே நிறைய முடிச்சுகளுடன் செம்மையை இருக்கும் என்று நம்புகிறோம். கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்திலும் சிக்சர் அடிச்சுட்டு போய்ட்டு இருக்காரு. அவருக்குனு ஒரு பாதை உருவாக்கிட்டாரு.