செல்வராகவன் அழுவறாரு.. தனுஷ் செம்ம போதை கை போல.. 'நானே வருவேன்' லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
எப்போ எல்லாம் தனுஷ், செல்வராகவன், யுவன் சேர்ந்து படம் பண்ணுகிறார்களோ அப்போ எல்லாம் பாட்டு பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பும்.
இவ்வளவு நாள் யுவன் form அவுட் அப்டின்னு ஒரு பேச்சு. எப்படி இவர் வெங்கட் பிரபு, செல்வா கூட கூட்டணி சேரும்போது இவ்வளவு மாஸாக பாடுகளை இறங்குகிறார் என்பது புரியாத புதிர். நீண்ட நாள் கழித்து தனுஷ்-செல்வராகவன் சேர்ந்த படம் பண்ணுகின்றனர். அதற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே வானை முட்டுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படம் கூட வேற லெவல் ஹிட்டு. இந்த படம் நல்லா இருக்குமா, இருக்காதா என்று நினைக்கும் போது, வேற லெவெலில் இருக்கப்போவுது என்று சொல்லாமல் சொல்லுகிறது இந்த முதல் சிங்கிள்.
என்ன படத்துக்கு ஒரே நெகடிவ் இந்த படம் பொன்னியின் செல்வனுடன் மோதுகிறது. இந்த படத்தை 29ம் தேதி ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்திருக்கின்றனர். கொஞ்சம் பிசிறு தட்டினாலும் பொன்னியின் செல்வன் புயலில் காணாமல் போய்விடும். ஏனென்றால் அந்த படத்திற்கு தான் எப்படியும் மக்கள் கூட்டம் செல்லும்.
இதையெல்லாம் தாண்டி இந்த படம் ஜெயிக்க வேண்டும் என்றால் கன்டென்ட் தான் முக்கியம்.
Video: