எங்கள் குலசாமி வீரன் தான்.. வீரன் தான்.. ரொம்ப நாள் கழித்து ஒரு கிராமத்து குத்து.. வீடியோ வைரல்.
தமிழ் சினிமாவில் இந்த சூப்பர்ஹெரோ படங்கள் எல்லாம் வரத்து போல என்று தான் நினைத்துக்கொண்டிருந்தோம். காரணம் நம்ம ஹீரோஸ் சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் பண்ண சிரிச்சு கலாய்ச்சிடுவாங்க அதுவே பாரின் ஹீரோக்கள் பண்ணா ஜாலியா என்ஜாய் பண்ணுவாங்க. அதனாலே இந்த ஐடியா இருந்தால் கூட இயக்குனர்கள் பண்ணமாட்டாங்க.
இப்படியும் படம் எடுக்கலாம் என்று எல்லாருக்கும் ஒரு படம் காட்டியது. நம்மளும் ஒரு சூப்பர் ஹீரோக்களை உருவாக்க முடியும் என்று காட்டிய படம் மின்னல் முரளி. பாலிவுட்ல கூட க்ரிஷ் படம் எல்லாம் வந்தது, ஆனால் அந்தளவு வரவேற்பு கிடைக்கவில்லை, கிடைத்திருந்தால் நிறையப்படம் வந்திருக்கும் அதே பாணியில்.
மீண்டும் இப்படி நல்ல கதை இருந்தால் படம் பண்ணலாம் என்ற ஹோப் கொடுத்து தமிழ் இயக்குனருக்கு ஒரு ஹோப் கொடுத்த படம் மின்னல் முரளி. அதன் வெற்றி தான் இப்போது வீரன் என்ற சூப்பர்ஹெரோ படம் உருவாக காரணம். மரகத நாணயம் இயக்குனர் தான் இந்த படத்துக்கும் இயக்குனர். அந்த படமே செம்ம ஹிட்டு.
இந்த ஒடிதத்தின் முன்னோட்டம் ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கை கொடுத்துள்ளது. என்ன ஹோப் என்று கேக்குறீங்களா சூப்பர் ஹீரோ படம் நம்ம எடுத்தாலும் தரமாக இருக்கும் என்று. ஹிப் ஹாப் ஆதி நல்ல சாய்ஸ். குறும்புதனமாகவும் இருக்கனும், கொஞ்சம் action பண்ணினால் நம்புற மாதிரியும் இருக்கனும், ட்ரெண்டிங்கில் இருக்கும் ஹீரோ வேற.
Video: