விமல் அண்ணாக்கு முரட்டு comeback இருக்கும் போலயே. துடிக்கும் கரங்கள் மாஸ் வீடியோ வைரல்.
தீயாக பரவும் திரைக்கதை திருப்பங்களும் ஒரு அத்தியாயத்தை திறந்தால் அத்தனையும் ஒரே மூச்சில் பார்க்க வைக்கும் நம்பகத்தன்மையுடன் ‘விலங்கு’.“விலங்கு” வெப் சீரீஸ் நல்லாருக்கு. இயக்குநர் பிரசாந்த், நடிகர் விமல், நடிகர் பால சரவணன், நடிகர் ராமதாஸ், வில்லனாக நடித்தவர் ஆகியோருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. வித்தியாசமான screenplay… நல்ல நடிகர் தேர்வு. நல்ல twist and turns. தமிழில் பெரிய ஹிட் அடிச்ச வெப் சீரிஸ் லிஸ்ட் எடுத்து பார்த்தா அதில் கண்டிப்பாக இந்த விலங்கு செரிஸ் இருக்கும். இப்படியொரு முரட்டு comeback கொடுத்துட்டு, மீண்டும் ஒரு படம் மூலமா நம்மை என்டேர்டைன் பண்ண வந்திருக்காரு விமல்.
விமல் ஒரு சிறந்த நடிகர் என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம். வாகை சூட வா என்ற ஒரு படம் போதும் அவர் யார் என்று சொல்வதற்கு. பின்னர் நிறைய ஹிட் படங்கள் கொடுத்து அன்றைய காலகட்டத்தில் இருந்து வந்த நடிகர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். மிகவும் எதார்த்தமான நடிப்பு தான் இவரோட ப்ளஸ். ஆனால் கோன்ஜா காலமாக அவருக்கு சரியாக அமையவில்லை. நண்பர்களிடம் ஹோட்டலில் தகராறு, பணமோசடி வழக்கு பிரச்சனை என்று ஏகப்பட்ட பிரச்சனைகள். அதிலிருந்து இப்போது தான் விடுபட்டு மனநிம்மதியுடன் இருக்காரு.
இந்த கதை கண்டிப்பாக ஒரு த்ரில்லர் கதைக்களம் தான். கேமராவை வைத்து சுற்றும் இளைஞன். பத்திரிகையாளர் என்று கூட சொல்லாம். கேமராவில் எதோ விஷயம் சிக்கியிருக்கிறது. அதை வைத்து வில்லன்களை chase செய்யும் ஒரு நாயகன். அதனால் ஏற்படும் சில மர்மங்கள், ஹீரோவுக்கு கடைசியில் என்ன ஆகிறது என்ற ட்விஸ்ட் turns உடன் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கலாம். ட்ரைலர் அவ்வளவு வேகமாக இருக்கிறது. கண்டிப்பாக படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
படத்தின் நாயகியாக மிஷா, ட்ரைலரில் அவங்களை பெருசா காட்டவில்லை, ஆனால் அவங்க இந்த படத்தில் சும்மா ஹீரோயின் ரோல் கிடையாது, முக்கியமான கதாபாத்திரம். விமல் நண்பனாக வரும் சதீஷுக்கும் சூப்பர் ரோல். எல்லாமே நன்றாக இருந்துவிட்டால் படம் கண்டிப்பா சம்பவம் பண்ணும்.
Video: