2 படம் பிளாப் ஆச்சுன்னா தெரியும்.. இயக்குனர் வெற்றிமாறன் பேச்சுக்கு ரசிகர்கள் கடுப்பு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
பிலிம் Companion நடத்தும் ரவுண்டு டேபிள் ஷோக்கு எப்போதுமே பெரிய ரசிகர்கள் உண்டு. மேலும் பெரிய இயக்குனர்களை அழைத்து ஒரு மாதிரி சூப்பரா பண்ணுவாங்க. அதுபோல இந்த முறை முழுவதுமா ஆங்கிலத்தில். சமீபத்தில் மாபெரும் வெற்றியடைந்த படங்களின் இயக்குனர்கள் அந்தந்த மொழியில் இருந்து அழைக்கப்பட்டு நேர்காணல் நடத்தியுள்ளனர்.
கெஸ்ட்ஸ் யாரென்று பார்ப்போம்: Here is the panel:
- Karan Johar (Rocky aur Rani Kii Prem Kahaani)
- Konkona Sensharma (Lust Stories 2: The Mirror)
- Vetri Maaran (Viduthalai - Part 1)
- Jeo Baby (Kaathal - The Core)
- Nelson (Jailer)
- Hemanth M Rao (Sapta Sagaradaache Ello - Side A & Side B)
- Avinash Arun (Three of Us)
- Karthik Subbaraj (Jigarthanda DoubleX)
இதில் நம்ம உற்று பார்க்க வேண்டியது நம்ம இயக்குனர்கள் என்ன பேசினாங்க என்பது தான். வெற்றிமாறன் பேசியது அவருக்கே backfire ஆகிவிடும் போல. அவர் என்ன பேசினார் என்றால், அதாவது படத்தின் பட்ஜெட் முதலில் 4.5 கோடியாக இருந்தது ஆனால் தற்போது அது 65 கோடி வரை போய்டுச்சு என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் படம் எடுக்கும் பொது அவருக்கு என்ன எடுக்கப்போகிறோம் என்றே தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த பேச்சு தான் இப்போ ரசிகர்களை ட்ரிக்கர் செய்துள்ளார். இந்த பிளானிங் ஒழுங்கா இல்லாததால் தான் வாடா சென்னை 2, விடுதலை 2, விஜய் படம், மற்றும் வாடிவாசல் ஆகிய படங்கள் ரொம்ப டிலே ஆகுது என்று சொல்லிருக்காங்க. வாடிவாசல் கிலிம்ப்ஸ் வந்து எவ்வளவு நாள் ஆச்சு, ஆனால் பாருங்க ஷூட்டிங் இன்னும் ஆரம்பிக்கல.
வீடியோ: