தமிழ் சமூகம் கொண்டாட வேண்டிய படமாக இருக்கும்.. சூரி மிரட்டி விட்டிருக்காரு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
சூரி - யின் நடிப்பை பார்த்து படத்துக்கு காத்திருக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள். தமிழ் சமூகம் கொண்டாட வேண்டிய படமாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.. படைப்பு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். சாதாரண நடிகனாக வந்து தனது சொந்த முயற்சியால் நல்ல நிலைக்கு வந்திருக்கும் சூரிக்காக இந்த படம் ஜெயிக்கும்.
விடுதலை என்பது படத்தின் பெயர் அல்ல மக்கள் போராட்டத்திற்கு கிடைக்கக்கூடிய ஒரு தீர்வு… தமிழ் சினிமாவை இன்னொரு படி உயர்த்திக் காட்டும் ஒரு கலைஞன் வெற்றிமாறன் அவர்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். விடுதலைக்கான குரல்கள் ஒலித்துக்கொண்டே தான் இருக்கும் அது எப்போவும் ஓயாது என்பதில் சந்தேகமில்லை.
நமது கலாச்சாரத்தையும் நமது வாழ்வியல் பண்பாட்டையும் நாம்தான் பாதுகாக்க வேண்டுமென்று உணர்த்திய நம்மில் ஒருவர்.
நம் விடுதலையும் நம் கையில்தான் உள்ளது என்று சொல்ல வருகிறார்.🔥
இந்த முன்னோட்டம் படத்திற்கான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியிருக்கு. கடைசி இரண்டு வரிகள் இந்த தமிழ் சமுகத்திற்கு தேவையான ஒன்று. நிச்சயம் ‘விடுதலை’ தமிழ் சினிமாவின் இன்னொரு சகாப்தமாக இருக்கும். வெற்றிமாறன் கதைகளை சிற்பமாக செதுக்க தெரிந்த நேர்த்தியான படைப்பாளி அவரின் படைப்புகளை பல கூறுகளாக பார்த்து பார்த்து ரசிக்க தூண்டும்.
Video: