குழந்தைகளுக்கு முன்பு புத்தகங்களை படியுங்கள் - வெற்றிமாறன். 'தற்குறி' என்று விமர்சித்த எச்.ராஜா. வீடியோ வைரல்.

Vetrimaran vs h raja video viral

குழந்தைகளுக்கு முன்பு புத்தகங்களை படியுங்கள் செல்போனை உபயோகிக்காதீர்கள் என்று வெற்றிமாறன் கூறியது இணையதளத்தில் வரவேற்பு பெற்றுள்ளது. அதாவது குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து அவர்கள் செய்யும் விஷயங்களை பார்த்து கற்றுக்கொள்கின்றனர். அதனால் அவர்களுடன் இருக்கும்போது செல்போனை அதிக நேரம் உபயோகிக்காமல், புத்தகம் படியுங்கள் என்று சமீபத்தில் அவர் பங்குபெற்ற குழந்தைகளுக்கான நூல் திறப்பு விழாவில் பேசினார். மேலும் இன்னொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியது சர்ச்சையாய் வெடித்துள்ளது.

தமிழ் ஸ்டுடியோ அமைப்பு ஒருங்கிணைத்த மணிவிழா மற்றும் குறும்படம்/ ஆவணப்படம் கலைவிழாவில் பங்கேற்று 38 இளம் இயக்குநர்களுக்கு சான்றிதழ் மற்றும்பொற்கிழி வழங்கிப் பாராட்டினார் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன். அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் ராஜேஷ், இளவரசு ஆகியோர் உரையாற்றினர். கவிஞர் ராசி அழகப்பன் தலைமை வகித்தார்.

சினிமாவை அரசியல் மயமாக்குவது ரொம்ப முக்கியம். தமிழ் சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுத்ததன் விளைவாகத்தான் தமிழ்நாடு இன்னும் ஒரு மதச்சார்பற்ற மாநிலமாகவும் பல வெளிப்புற சக்திகளை எதிர்க்கும் பக்குவத்துடனும் இருந்து வருகிறது - வெற்றிமாறன் சிறப்பான பேச்சு.

திருவள்ளுவருக்கு காவி ஆடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை ஒரு இந்து அரசனாக்குவது என நம்முடைய பல அடையாளங்கள் நம்மிடமிருந்து பறிக்கப்படுகிறது என்றும் பேசினார். இதனால் குறிப்பிட்ட அந்த கட்சியினரிடமிருந்து வலுவான எதிர்ப்பு அவரை நோக்கி பாய்கிறது.

அதில் சில: சென்று ஆண்ட திசையெல்லாம் சிவாலயங்கள் எழுப்பிய மன்னவனை இந்து அரசன் என்று சொல்லாமல் திராவிட ஆசான் என்றா சொல்ல முடியும்…?

‘வெற்றிமாறன்’ போன்ற சினிமாக்காரர்கள் எல்லாம் மைக்கு கிடச்சா போதும் ம** கணக்கா பேசுவானுங்க. தமிழ் சினிமாவின் பீடைகள்.

--

➥ ராஜராஜ சோழனை “இந்து” அரசனா மாத்திட்டாங்க - இயக்குநர் வெற்றிமாறன்..

➥ பெருவுடையார் கோவில் கட்டிய மாமன்னன் என்ன இஸ்லாமியரா அல்லது கிறித்தவரா, பௌத்தரா என்பதை சொல் தற்குறி அடிமைமாறன்.

--

எச்.ராஜாவின் கருத்து:

Vetrimaran vs h raja video viral

Video:

Related Posts

View all