முதல்ல தளபதி.. இப்போ தல.. முரட்டு ஹீரோயின்.. விடாமுயற்சி லேட்டஸ்ட் அப்டேட் வைரல்.

Vidaa muyarchi latest update

தல அஜித் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் விடாமுயற்சி, முன்னாடி இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இயக்குவதா இருந்துச்சு, ஆனால் தயாரிப்பு நிறுவனம் விக்கி கதையில் திருப்தி இல்லாததால் அந்த வாய்ப்பு இயக்குனர் மகிழ் திருமேனிக்கு போனது. இவர் எடுத்த எல்லா படமும் ஹிட்டு, முதல் படத்தை தவிர.

அஜித் இவ்வளவு நாள் அவரோட லைப் ஆப் ராம் வாழ்க்கையை வாழ்ந்து வந்தாரு, அடுத்த கொஞ்ச மாதம் இவர் இனி ரசிகர்களுக்காக அர்ப்பணிக்க போகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் ஆரம்பித்து அக்டோபர் மாதமே முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் படம் 2024 பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணுவாங்க போல.

Vidaa muyarchi latest update

இந்த படத்துக்கு அனிருத் தான் இசை. இப்போ இருக்கும் பெரிய ஹீரோக்களுக்கு எல்லாம் அனிருத் தான் இசையமைத்துவருகிறார். தெலுங்கு பெரிய ஹீரோ படங்களுக்கும். மேலும், இந்த படத்தின் முக்கிய வில்லன் அர்ஜுன் தாஸ் என்று சொல்லப்படுகிறது. நடந்தால் மிகப்பெரிய சம்பவமா இருக்கும். புல் பார்ம்ல இருக்காரு அவரு.

மீண்டும் கதாநாயகியாக த்ரிஷா தான் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்போவுமே திரிஷாக்கு அஜித்தை ரொம்ப பிடிக்கும். இதுல என்ன லக் என்றால் டாப்பில் இருக்கும் இரண்டு ஹீரோக்களுடனும் த்ரிஷா back டு back படம் பண்ணுவது ரொம்ப மகிழ்ச்சியான விஷயம். மீண்டும் குயின் பட்டத்தை சூடி தமிழ் சினிமாவை ஆள வருகிறார்.

Latest Update:

Related Posts

View all