பார்க்கும்போதே பதறுதே.. சூரி.. சேதுபதி.. வெறித்தனமான விடுதலை படம் மேக்கிங் வீடியோ வைரல்.
இந்த விடாயே பார்க்கும்போது நமக்கு அவ்வளவு பதறுது, சினிமாவில் உயிரை கொடுத்து வேலை செய்வாங்க என்று சொல்வாங்க. சூரி உண்மையாவே உயிரை கொடுத்துதான் வேலை செஞ்சிருப்பார் போல. காய் கால்களில் பெரிய அடி. ஆனால் இதையெல்லாம் தாண்டி படத்தின் வெற்றி தான் அந்த வலியை காணாமல் போக வைக்கும்.
வாங்கிய காசுக்கும் மேலாக தரமாக உழைத்து தரும் அற்புத படைப்பாளி வெற்றிமாறன். வெற்றிமாறன் சூரி விஜய் சேதுபதி உங்கள் உழைப்பு சினமா துறையும் மக்களும் பாராட்டுவார்கள் என்று நம்புகிறோம். அதற்கு இந்த மேக்கிங் வீடியோவே சாட்சி.
பின்னணி இசை.. BGM சும்மா அள்ளிட்டு போகுது.. காட்டின் தன்மையை உணர முடியுது. 80 வயசு ஆன கிழவன் என்று நினைத்தீர்களா இல்ல.. இளைஞன் இசைஞானி இளையராஜா என்றும் இசையின் ராஜா. பொல்லாதவன், ஆடுகளம்,விசாரணை, வடசென்னை, அசுரன் வரிசையில் மற்றுமொரு தரமான வெற்றிமாறன் படைப்பு விடுதலை பாகம்-1ம் பெரிய சம்பவமா இருக்கும் என்று நம்புகிறோம்.
ஒட்டு மொத்த அணியையும் பெருமைப்படுத்தும் விதமாக உள்ளது இந்த வீடியோ. அனைத்தையும் க்ரீன் ஸ்கிரினில் எடுத்து நோகாமல் நோன்பு நோற்கும் இந்த காலத்தில் வெற்றியின் இந்த முயற்சி மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்று. ஒரு சில நபர்கள் பார்க்கும் போது எதிர்பார்ப்பு எகிறுது கௌதம், பிரகாஷ்ராஜ், சூரி, சேதுபதி…
Video: