ஒரு வழியா வெற்றிமாறன் விடுதலை படத்தை முடிச்சுட்டாரு. சூரி மாஸா இருக்காரு. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
விடுதலை படம் கிட்டத்தட்ட ஸ்டார்ட் பண்ணி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. வெற்றிமாறன் இந்த படத்தை quickie என்று சொல்லியேயே ஆரம்பித்தார். யாருமே எதிர்பார்க்கவில்லை இவ்வளவு நாள் ஆகும் என்று. அசுரன் படம் 2019ல் ரிலீஸ் ஆகியிருக்கு. பாருங்க மூன்று வருடம் முடிந்துவிட்டது. ஆனால் என்ன ஒரு சந்தோஷமான விஷயம் என்றால் இந்த படம் இரண்டு பாகமாக வெளிவர இருக்கிறது.
இந்த படத்திற்கு வெற்றிமாறன் முடித்து யாருக்கு சந்தோஷமா இருக்கோ இல்லையோ சூர்யா ரசிகர்களுக்கு மிகவும் சந்தோசமா இருக்கும். ஏனென்றால், விடுதலை படம் வெளியான பிறகு வாடிவாசல் படத்தின் அப்டேட் வெளியாகும்.
-தயாரிப்பாளர் தாணு இதை சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு காரணம் அந்த படம் ட்ராப் ஆகிவிட்டது என்று வந்த வதந்தி தான்.
விஜய் ரசிகர்களுக்கு என்ன வருத்தம் என்றால், அந்த ஆட்டோக்கார தம்பி வேற விடுதலை, வாடிவாசல்னு லைனா படம் புக் ஆகிருக்காரே எப்ப முடிப்பாருன்னு தெரியலயே என்று. ஏனென்றால் அவர் ஒரு பேட்டியில் சொன்னது அடுத்து விஜய் வெச்சு ஒரு படம் எடுக்கிறேன் என்று. ஆனால் இவ்வளவு கமிட்மெண்ட்ஸ் வெச்சுட்டு உவர் எப்போ விஜய் படம் எடுப்பார் என்று ஆவலுடன் காத்துக்கிடக்கின்றனர் ரசிகர்கள்.
விடுதலை படத்தில் சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி வாத்தியாராக நடித்துள்ளனர். இந்த படத்தை முதலில் எடுத்துவிட்டு ஒரு சில காட்சிகள் எல்லாம் ரீ ஷூட் செய்தனர். இந்த படம் ரிலீஸ் ஆனால் சூரியை மக்கள் கொண்டாட வாய்ப்பிருக்கிறது. உடம்பெல்லாம் வேற மாதிரி பண்ணிருக்காரு. கான்ஸ்டபிள் கதாபாத்திரம், சரியா அதுக்கு justify பண்ணிருக்காரு.
Latest Photos:
'விடுதலை' படபிடிப்பு நிறைவு❤️#Viduthalai shooting wrapped 🥰#VetriMaaran Annan@ilaiyaraaja Sir@elredkumar Sir@VijaySethuOffl mama@VelrajR Annan@PeterHeinOffl @BhavaniSre@mani_rsinfo @rsinfotainment @RedGiantMovies_ Thanks for all technicians & team 🙏 pic.twitter.com/TZKARRdH92
— Actor Soori (@sooriofficial) December 30, 2022