எத்தனை பேரு.. சம்யுக்தா கூட சங்கீதாவும் நடிக்கிறாங்க வாரிசு படத்துல.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான் தளபதி விஜய் நீண்ட நாள் கழித்து ஒரு குடும்ப படம் பண்ணுகிறார். அது தான் இந்த வாரிசு படம், வரும் பொங்கலன்று ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தில் ஏற்கனவே படக்குழு அறிவித்தது போல, ஏகப்பட்ட கதாபாத்திரங்களை வைத்து இயக்கி வருகிறார் வம்சி. வம்சி படம் என்றாலே பிரமாண்டம் தான். கண்டிப்பா ஒரு பெரிய வீடு, கம்பெனி போன்றவற்றை ஹீரோவுக்கு இருக்கும், அதே டெம்ப்ளட் தான் இந்த படத்திலும். ஆனால் திரைக்கதையில் என்ன புதிதாக தரப்போகிறார் என்பதில் இருக்கிறது சுவாரசியம்.
ஏனென்றால் விஜய்க்கு இந்த மாதிரி படம் புதுசு. மேலும் படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்களில் சங்கீதாவும் இணைந்துள்ளார். இவங்களும் சம்யுக்தாவும் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல். மேலும், அந்த புகைப்படத்தில் நடிகர் ஷாமும் இருக்கிறார். அவரும் ஒரு முக்கியமான கதாபாத்திரம்.
இந்த படத்தில் தற்போது புதிதாக ஸ்ரீமன்னும் இணைந்துள்ளார். இயக்குனர் வம்சியுடன் அவர் எடுத்து போட்ட போட்டோ இணையத்தில் ட்ரெண்டிங்.
அவரின் பிறந்தநாளன்று இந்த அறிவிப்பு வந்தது. செல்லமாக விஜய்யை ‘தேங்க்ஸ் விஜிமா’ என்று குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.
மேலும் தளபதி ரசிகர்களுக்கு இன்னொரு அப்டேட் என்னவென்றால் வரும் தீபாவளியன்று படத்தின் முதல் சிங்கிள் விட படக்குழு திட்டமிட்டிருக்கிறது. சித் ஸ்ரீராம் மற்றும் ஜோனிதா காந்தி இந்த பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.