இப்போ அவரு தான் நம்பர் 1.. விஜய் - அதிரடி அரசியல் (3 min read).. ஒரு நடுநிலையாளரின் தரமான கருத்து.
எம்ஜிஆருக்கு பிறகு அரசியலுக்கு வந்த எல்லா நடிகரும் தோத்துட்டாங்க யாருமே ஜெய்க்கல, விஜய்யும் பத்தோட பதினொன்னு போறபோக்குல சொல்றாங்க.
ஆனா அது தப்பு கணக்கு. எம்ஜிஆர் நம்பர் 1 நடிகர். அதுக்கு பிறகு வந்த யாருமே நம்பர் 1 இல்ல. பாக்யராஜ் சரத் டிஆர் நெப்போலியன் கார்த்தி எல்லோருமே வரிசையில் எங்கோ இருந்தவங்க.
விஜயகாந்த் மட்டும்தான் அவர் வரும்போது மூணாவது இடத்தில இருந்து வந்தார்(அந்த டைம்ல ரஜினி 1 கமல் 2). அந்த மூன்றாம் இடத்துல இருந்து வந்ததுக்கே 10% வாக்கு வங்கி உருவாக்கினார்.
அப்படினா இன்னைக்கு தமிழ் சினிமால நம்பர் 1 இடத்துல இருக்கும் விஜய் வந்தா? எம்ஜிஆருக்கு பிறகு நம்பர் 1 இடத்துல இருந்து வரும் ஒரே நடிகர் விஜய் மட்டுமே.
தமிழ்நாட்ல ரேஷன் கார்டு வச்சுருக்குற குடும்பங்கள் தோராயமா 2 கோடி. ஒரு குடும்பத்துல சராசரியா 4 பேர்ல ஒரு விஜய் ரசிகனாவது இருப்பான். (ஸ்கூல் பசங்கள சேக்கல) திமுக அதிமுக எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிட்டு வெறித்தனமா விஜய்க்கு தான் ஓட்டு போடுவான்.
ஊழல ஒழிக்கணும்னு எல்லாம் இல்ல. மனித மனம் ஈகோ நிறைஞ்சது. தன்னோட ஸ்டார் தோக்கக்கூடாதுனு தான் ஈகோல செயல்படும். ஜெயலலிதா என்ன ஊழல் இல்லாத ஆட்சியா நடத்தினாங்க? ஏன் மக்கள் ஜெயிக்க வச்சாங்க? கருணாநிதி ஜெயிக்க கூடாதுனு பெரும்பாலான மக்களின் ஈகோ அது. அதே கருணாநிதிய ஜெயிக்க வச்சு ஜெயலலிதாவ தோக்கவச்சதும் அதே ஈகோ தான்.
மத்த கட்சிகள்லாம் லைப்ப தொலைச்சதுக்கும், திமுக அதிமுக வீழாம இருக்குறதுக்கும் அந்த ஈகோ தான் காரணம், அடுத்து தான் பணம், மார்க்கெட்டிங் எல்லாம்.
வீட்டுக்கு ஒரு ஓட்டு நிச்சயம். அப்பா அம்மா மனைவி கணவன கன்வின்ஸ் பண்ணா ரெண்டு ஓட்டுகூட விழும். இதுல எப்பவும் ஓட்டு மாத்தி மாத்தி போடும் நடுநிலையாளர்கள் கணிசமா விஜய்க்கு ஓட்டு போடுவாங்க.
திமுக அதிமுக மற்ற சிறிய கட்சில இருந்து விஜய் கட்சிக்கு வேற போவாங்க. முழுக்க முழுக்க விளம்பரத்துல காச அள்ள வேற வழியே இல்லாம எல்லா டிவி சேனலும் யூடியூப் சேனலும் விஜய் விஜய் விஜய்ய மட்டும் தான் காட்டுவாங்க பேசுவாங்க.
விஜய் தமிழன் என்பது பலம். அதோடு பெரியார் அம்பேத்கர் காமராஜர படிக்க சொல்லும் பகுத்தறிவு கூடுதல் பலம். விஜய்க்கு அறிவே இல்லனு எதிர்க்கிற எல்லாரும் இலவசமா பப்ளிசிட்டி பண்ணி தருவாங்க.
எல்லாத்தையும் தாண்டி அரசியல் மேடைல “இருண்ட ஆட்சி ஸ்டாலினே சாட்சி, காலை வாரும் பழனிச்சாமினு” விஜய் பேசினா அரசியல் களமே பரபரக்கும்.
எல்லாத்தையும் தாண்டி கணக்கு போட்டு பாத்தா விஜய் ஜெயிப்பார் அல்லது குறைந்தது 20% வாக்கு வாங்குவார்.
Thanks @YourNanban for the content.