ஏண்டா இப்படி பண்றீங்க.. கண்டபடி எடிட் செய்து உலக லெவெலில் மானத்தை வாங்கும் விஜய் - அஜித் ரசிகர்கள். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Vijay ajith fans ugly fight video viral

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் படம் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம் தான். இவர் படம் ரிலீஸ் ஆகும் நாள் தான் இளைஞர்களுக்கு தீபாவளி. எல்லாம் சரி, ஆனால் இந்த ஆன்லைனில் மார்ப் செய்து இவர்கள் போடும் சண்டை நாளுக்கு நாள் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனால் தமிழ் சினிமாவின் மனம் தான் போகும் என்று இவர்களுக்கு புரியமாட்டீங்குது.

இதை ஸ்டார்ட் செய்வது இரண்டு தரப்பில் இருந்தும் ரெண்டு மூணு பேராக தான் இருக்கும், ஆனால் அது வளர்ந்து வளர்ந்து அப்படி ட்ரெண்ட் ஆகிறது. பாரின் பத்திரிகையாளர்கள் எல்லாம் ட்வீட் செய்து கேக்கும் விதத்துக்கு ஆளாகியுள்ளோம்.

கடந்த ஞாயிற்றுகிழமை அன்று பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படத்தின் டீசரை வெளியிட்டது படக்குழு. படத்தில் வந்த கிராபிக் காட்சிகளை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். கிட்டத்தட்ட 500 கோடி செலவு எண்டு சொல்றீங்க என்ன பொம்மை படம் மாதிரி எடுத்து வெச்சுருக்கீங்க என்று நாலாபக்கமும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. 50 கோடி ப்ராஜெக்ட் என்றும் பாராமல் கழுவி ஊத்தினர் ரசிகர்கள்.

அந்த டீசரில் வரும் ஒரு கட்சியில் சைப் அலி கான்னுக்கு பாத்து தலை வருவது போன்று கிராபிக் செய்யப்பட்டிருந்தது. தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் முகத்தை வைத்து funny ஆக எடிட் செய்தனர் அல்லு அர்ஜின் ரசிகர்கள், எடிட் செய்த கொஞ்ச நேரத்தில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து வேற லெவெலில் ட்ரெண்ட் ஆனது. எப்படி அவர்கள் மட்டும் பண்ணலாம் என்று விஜய் ரசிகர்கள் அஜித்துக்கும், அஜித் ரசிகர்கள் விஜய்க்கும் கேவலமாக எடிட் செய்தனர்.

இதில் இரண்டு வீடியோவும் வேற லெவெலில் ட்ரெண்ட் ஆகி கிட்டத்தட்ட 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இவர்கள் செய்த இந்த முட்டாள்தனமான காரியத்தால் பாரின் பத்திரிகையாளர் எல்லாம் இதைப்பற்றி கேள்விகேக்கும் நிலை உருவாகியுள்ளது. அவங்க அவங்க ஸ்டார்ஸ் மட்டும் கொண்டாடுங்க ரசிகர்களே.

Video:

Related Posts

View all