விஜய் ஆண்டனியை அடுத்த லெவலுக்கு கொண்டு போற படம் இது.. ப்பா மிரட்டல்.. கொலை ட்ரைலர் வீடியோ வைரல்.
நடிகர் விஜய் ஆண்டனியை கண்டிப்பாக இந்த படம் அடுத்த லெவெலுக்கு கொண்டு போகும். அப்படி இருக்கு ட்ரைலர். ஹாலிவுட்டை மிஞ்சிய பிரமாண்டம் என்று சொல்வது வழக்கம் ஒரு படம் நல்லா இருந்தால்.
ஆனால் இந்த படம் ஹாலிவுட் தரத்தில் உள்ளது என்று கூறலாம். ஒவ்வொரு கட்சியும் அவ்வளவு ரிச்சாக இருக்கிறது. சால்ட் & பெப்பர் கெட்டப்பில் வரும் விஜய் ஆண்டனி மிரட்டுகிறார், ரித்திகா சிங்கும்.
வழக்கமாக ஒரு கொலை நடந்து விட்டது, அதை கண்டுபிடிக்க ஒரு தனிப்படை என்று இல்லாமல் தமிழ் சினிமாவில் ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ் பாணியில் ஒரு படம். கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடியும். கண்டிப்பா திரையரங்கில் தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் செதுக்கிய காட்சிகள் அப்படி.
பின்னை இசையும் மிரட்டுகிறது. கிரிஷ் கோபாலக்ரிஷ்னன் தான் இசையமைப்பாளர்.
முக்கிய கதாபாத்திரங்களில் ராதிகா, முரளி சர்மா, ஜான் விஜய். கிஷோர், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர்.
Viral Video: