கண்ண வேற கட்டிருக்காரு.. அதுல என்னமோ எழுத்திற்கு.. விஜய் ஆண்டனி சம்பவம் லோடிங். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
விஜய் ஆண்டனி ஒரு ஸ்கிரிப்ட் சூஸ் பண்ணி நடிக்கிறார் என்றாலே அந்த படம் கண்டிப்பாக தரமான படமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு, அப்படி இப்போது அவரே தயாரித்து இயக்கும் படம் தான் பிச்சைக்காரன் 2 படம், இந்த படம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆகிறது. அடுத்த வருடம் சம்மர் ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவித்த முதல் தமிழ் படம் இது தான். இந்த படத்துடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் ரிலீஸ் ஆக நிரைய வாய்ப்பு இருக்கு.
பிச்சைக்காரன் படம் எப்படி இருந்தது என்று அனைவர்க்கும் தெரியும். அன்றைய காலகட்டத்தில் ஒரு முழு நீல கமர்சியல் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி செய்தது என்றால் அது அந்த படம் மட்டும் தான். பல விருதுகளை வென்று குவித்தது. தெலுங்கில் மகேஷ் பாபுவின் படத்தை விட அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இப்போ இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருது என்றால் அந்த படத்துக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும் என்று நீங்களே நினைத்து பாருங்கள்.
இந்த படம் ஆரம்பித்தது முதலே விஜய் ஆண்டனி ஒரு வார்த்தையை அடிக்கடி யூஸ் பண்ணிட்டு இருக்காரு. அதன் பெயர் பிகிளி.. ஆண்டி பிகிளி.. என்று. இந்த இரண்டு வார்த்தைக்கும் அர்த்தம் என்னவென்று தெரியவில்லை ஆனால் கண்டிப்பா படத்தில் தரமா ஒன்னு வெச்சிருப்பார் என்று மட்டும் தெரியும். ஏனென்றால் இசையமைக்கும் போதே புரியாத வார்த்தைகளை உபயோகித்து ஹிட் கொடுத்தவர் அவரு.
இன்று ரிலீசான முதல் பார்வையில் கூட அந்த வார்த்தை இருக்கிறது, ஆனால் கண்ணை காட்டியுள்ளார். கண்டிப்பாக சட்டத்தை கேள்வி கேட்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் படத்தில் பெருசா அரசியல் பேசமாட்டாரு. ஆனால் இந்த படத்தின் லுக் எல்லாம் பார்த்தால் அப்படி தெரியல தரமான சம்பவம் செய்வார் போல.