அய்யோ என்னடா ஆரம்பமே அப்படி இருக்கு.. விஜய் ஆண்டனி படமா.. ரத்தம் வீடியோ வைரல்.
விஜய் ஆண்டனி நடிக்கும் ரத்தம் படம் வரும் 6ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கு. அப்படியொரு படம் இதுவரை தமிழ் சினிமாவில் வந்ததே இல்லை என்றும் சொல்ல படுகிறது. இயக்குனர் ஒருமுறை பேசும்போது இந்த கதையை எப்படி இதுவரை தமிழ் சினிமா விட்டு வைத்தது என்று தெரியவில்லை என்று அவர் சொல்லியிருந்தார்.
மேலும் விஜய் ஆண்டனி மாபெரும் துயரத்தில் இருந்து வெளிவர இந்த படம் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த படத்தின் வெற்றி அவரது துக்கத்தின் ஒரு சிறிய அளவை கொஞ்சம் கம்மி செய்யும். கண்டிப்பா இந்த படத்தை சுற்றி எல்லாமே கொஞ்சம் பாஸிட்டிவா தான் இருக்கு. பிசிறு தட்டாமல் இருந்துவிட்டால் ஜெயம் தான்.
எப்படி தைரியமா முதல் 5 நிமிடத்தை விடறாங்க என்று தெரியவில்லை, அதில் தான் இருக்கு சுவாரசியம். ஆனால் அந்த டீம் மேல் இருக்கும் confidence, இதை விட நிறைய திரையரங்கு மொமெண்ட்ஸ் இருக்கு. இது சும்மா ஒரு சாம்பிள் என்று சொல்றாங்க போல. ஆனால் இப்படி ஒரு முரட்டு ஐந்து நிமிடத்தை இதுவரை பார்த்ததில்லை.
ரம்யா நம்பீசன், நந்திதா எல்லாம் வர்றாங்க. பத்திரிகையாளர்கள் பற்றிய படம் இது. பத்திரிக்கை ஆபிஸ்குல்லையே புகுந்து ஒரு சக பத்திரிகையாளரை கொன்றது எல்லாம் வேற லெவல். ஆனால் அதற்கான காரணம் கண்டிப்பா சுவாரசியமாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த வரம் ரிலீஸ் ஆகும் எல்லா படமும் நல்ல விமர்சனங்கள் தான் பெரும் என்று பச்சி சொல்லுது.
Video: