என் பொண்டாட்டி தான் எனக்கு பாஸ்.. அவங்க கீ கொடுத்தா நான் ஆடுவேன்.. விஜய் ஆண்டனி லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
கணவன் மனைவி அன்பு என்பது சண்டை போடாமல் வாழ்வதில் இல்லை சண்டைக்கு பின் இருக்கும் சமாதானத்தில் இருக்கிறது.
வயதுகள் நூறு கடந்தாலும் தலைமுடியை நரைத்தாலும் கணவன்-மனைவி பந்தத்தின் முளைத்த அன்பு மட்டும், வயதுகள் என்பதே இல்லை.
என்ன இன்னைக்கு கணவன் மனைவி அன்பு பற்றி ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்கீங்க என்று தானே நினைக்கிறீங்க. நினைப்பது நன்றாக தெரிகிறது. இதெற்கெல்லாம் காரணம் சமீபத்தில் பார்த்த வீடியோ ஒன்று தான். நடிகர் விஜய் ஆண்டனி, அவரோட மனைவியிடம் செல்லமாக செய்த சேட்டை தான் அது.
விஜய் ஆண்டனி எப்போதுமே எதார்த்தமாக காமெடியாக பேசும் ஒரு சில நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் பேச ஆரம்பித்தாலே நம்மள கலாய்க்கிறாரா இல்லை உண்மையை சொல்றாரா என்ற confusion நம்மிடையே இருக்கும். ஏனென்றால் சிரிக்காம சீரியஸா மூஞ்சிய வெச்சு நம்ம அவுட் ஆக்கிட்டு போயிட்டே இருப்பாரு.
இவரோட பிச்சைக்காரன் 2 படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. இவரோட பிச்சைக்காரன் படம் எப்படி ஓடுச்சு என்பது அனைவர்க்கும் தெரியும். இந்த படத்தில் என்ன ஸ்பெஷல் என்றால் இவரே தயாரித்து நடிச்சிருக்காரு. இவருக்கு பக்கபலமா இவங்களோட மனைவி இருந்திருக்காங்க. அந்த பாண்டிங் பற்றிய வீடியோ தான் இது.
Video: