பிசினஸ் அப்டின்னு வந்துட்டா விஜய் தான் நம்பர் 1. அஜித் ரசிகர் கொடுத்த வாக்குமூலம். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நான் ஒரு தீவிரமான அஜித் ரசிகன் அதுக்காக உண்மையை மறைக்க முடியாது ரசிகர்களை ஈர்க்கும் சக்தி விஜய்க்கே உண்டு, வியாபாரம், வெற்றி படங்கள், ரசிகர்கள் எல்லாம் அஜித்தை விட விஜய்க்கே உண்டு என்று ஒருவர் சமீபத்தில் சொல்லியது தான் இணையத்தில் வைரல். அதுவும் வாரிசு - துணிவு சண்டை போயிட்டு இருக்கும்போது இப்படி ஒரு ஸ்டேட்மென்ட் ஒருவரிடம் இருந்து.
இதுபோன்ற விஷயங்கள் இந்த சமயத்தில் வறுத்தால் அஜித் ரசிகர்களை மிகவும் பாதித்துள்ளது. ஏற்கனவே overseas-ல் விஜய் படத்துக்கு அதிகமாக டிக்கெட் வித்திருப்பதாக நிறைய ரிப்போர்ட்டாகள் வந்த வண்ணம் இருக்கின்றன. வெறும் மூன்றே பாடல் தான் ரிலீஸ் ஆகியிருக்கு, இன்னும் டீசர், ட்ரைலர் வந்தால் தான் தெரியும் படத்தின் குவாலிட்டி எப்படி இருக்கிறது என்று. இரண்டு படத்துக்கும் இதே தான். கடைசியில் ஸ்டார் பவர் என்பதை எல்லாம் தாண்டி, யார் படம் நல்லா இருக்கோ அவங்க ஜெயிப்பாங்க.
பாக் ஆபிஸ் என்று எடுத்துக்கொண்டால் இவ்வளவு நாள் ஆதிக்கம் செலுத்தி வந்தது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான். ஆனால் தற்போது ரஜினி படமே விஜய், அஜித் படம் கூட வந்தால் விஜய்/அஜித் படம் தான் அதிக வசூல் செய்யும் என்பது மறுக்கமுடியாத உண்மை. ரஜினி சொன்னது போல நேரம், காலம் இப்போ இன்னோருத்தருக்கு வந்திருக்கு. எவ்வளவு பக்குவமாக இருந்தால் இப்படியொரு ச்டடேமேன்ட் அவர் கொடுப்பாரு.
கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளியில் அவர் தெளிவாக பேசியுள்ளார். நாங்களும் அப்படி தான் நினைக்கிறோம். அதனால் தான் பிளாப் படமான பீஸ்ட் படம் கூட 2022 பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூல் செஞ்ச படங்களில் நான்காம் இடத்தில இருக்கிறது. படம் இன்னும் கொஞ்சம் சூப்பரா இருந்திருந்தால் எவ்வளவு சூப்பரா இருந்திருக்கும். விடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யவும்.
Video:
Online la evlo vada suttalum, deep inside they know #ThalapathyVijay is THE No. 1 actor in Tamil cinema. 😎pic.twitter.com/9NMdBXge6f
— George (@VijayIsMyLife) December 22, 2022