துரதிர்ஷ்டவசமாக, நான் தவிர்த்த ஓர் விதை.. இப்போ அவன்தான் நம்பர் 1.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Vijay bharathiraja video viral

என்கலைப்பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக, நான் தவிர்த்த ஓர் விதை. இன்று வலிகளை வலிமையாக்கி தமிழகத்தின்இளைஞர்களின், சொத்தாக உலகமே,கொண்டாப்படும் “விஜய்க்கு” இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். காதலாகட்டும், நடுத்தர குடும்ப கதாபாத்திரமாகட்டும், நையாண்டி, நக்கலுக்கானஅந்த உடல் பாவனை,

நடனத்தின் நளினம், சண்டைக்காட்சிகள்,அதிலும் மேலாக கோடிக்கனக்கானரசிகர்களை உலகம்முழுவதும் ஈர்த்துவைத்திருக்கின்ற, வெற்றியின் V என்றமுதல் எழுத்தாகக்கொண்ட விஜய்க்கு 46வது பிறந்த நாளில்,எல்லாசிறப்பும் பெற்று,நீடூழிவாழ பாசத்துடன் வாழ்த்துகிறேன் அன்புடன் பாரதிராஜா.

Vijay bharathiraja video viral

இந்த பிறந்தநாள் வாழ்த்து இரண்டு வருடத்திற்கு முன்னாடி இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் விஜய்க்காக எழுதியது. என்னடா இவர் இப்படி புகழ்ந்து எழுதியிருக்கார் என்ற டவுட் அப்போவே இருந்தது, இப்போது மீண்டும் ஒருமுறை வீடியோவில் சொல்லியுள்ளார். அந்த வீடியோ தான் இணையத்தில் செம்ம வைரல்.

விஜய் இளம் வயதில் ஏகப்பட்ட அவமானங்களை சந்தித்தவர், அப்படி பல வேதனைகளை கடந்து வந்து தான் இப்போ நம்பர் 1 நடிகராக இருக்கிறார். இயக்குனர் பாரதிராஜா கூட விஜயை வைத்து இயக்கமுடியாது என்று சொல்லி ரிஜெக்ட் செய்து அனுப்பிவிட்டார். இப்போது ரிஜெக்ட் செய்ததற்காக ரொம்ப பீல் பண்றார் போல, அந்த உண்மை கண்ணில் தெரிகிறது.

Video:

Related Posts

View all