விஜய் செய்த ரொம்ப சின்ன விஷயம், அது கூட நியூஸ் ஆகுது. அதனால தான் அவர் நம்பர் 1. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Vijay did this became news

தளபதி விஜய் தற்போது இருக்கும் நிலமையில் அவர் என்ன செய்தாலும் அது நியூஸ் தான். ஆனால் நேற்று செய்த காரியத்தால் அவர் சின்னதாக நகர்ந்தால் கூட நியூஸ் ஆகிவிடும் என்று நேற்று புரிந்தது. விஜய் அவரோட ட்விட்டர் ப்ரொபைல்லை படத்தின் ரிலீஸ் டைமில் மட்டுமே யூஸ் பண்ணுவார், அதுவும் எதாவது அப்டேட் கொடுக்க வேண்டும் என்பதற்காக. ஒரு வருஷத்திற்கு ஒரு maximum ஒரு ஐந்து ட்வீட் மட்டுமே போடுவார். அதுவும் முதல் லுக் அல்லது பாடல் அல்லது ட்ரைலர் பற்றி மட்டும் தான்.

ஆனால் பிரபலமான ட்விட்டர் ப்ரொபைல் என்று எடுத்தால் இவர் போட்ட ட்வீட்க்கு மட்டும் தான் எங்கேஜ்மெண்ட் அதிகமாக இருக்கு. ஒரு ட்வீட் போட்டாலும் அவர் போடும் எல்லா டிவீடும் ஒரு லட்சம் லைக்குகளை அள்ளி குவிகிறது. இது எந்த நடிகருக்கும் கிடைக்காத ஒரு விஷயம். தமிழில் மட்டுமல்ல அவருக்கு இப்போது இந்தியா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள். கூடிய சீக்கிரம் ஒரு பான் இந்தியா படம் பண்ணினால் அவருடைய மாஸ் என்னவென்று தெரியும்.

Vijay did this became news

போன வாரம் வாரிசு படத்தின் போட்டோக்கள் எல்லாம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகின. கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. அதை ரசிகர்கள் எடுத்து அவர்களின் எடிட்டிங் திறமையை காமித்து விஜயை அதில் டேக் செய்தனர். பின்னர் ஆச்சர்யமாக தன ரசிகர் எடிட் செய்த புகைப்படத்தையே அவரின் ப்ரொபைல் picture-ஆக மாற்றியுள்ளார். இதனால் டிசைன் செய்த ரசிகர் மகிழ்ச்சியில் உச்சத்துக்கே சென்றுள்ளார்.

அவர் புகைப்படத்தை மாற்றியது இப்போது பல செய்தி சேனல்களில் ஒரு பிரேக்கிங் நியூஸ் போல மாறியுள்ளது ஆச்சர்யமளிக்கிறது. அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல்.

Video:

Related Posts

View all