ரஜினி ரசிகர்களை விட விஜய் ரசிகர்கள் matured அரசியல் பேசுறாங்க.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்..
இப்போ ஏன் இப்படி டைட்டில் வெச்சுருக்கீங்க என்று பலர் கேட்கலாம். ஒருவரை அவருடைய துறையில் இருந்தே ஒப்பிடுவது தப்பில்லையே. ஆனால் ரஜினி தான் அரசியலுக்கு வரலையே என்று கேட்டல், அவர் வருகிறேன் என்று சொல்லிய இரண்டு வருடத்தில் நடந்த விஷயங்களை வைத்து தான் ஒப்பிடவுள்ளோம்.
சமீபத்தில் நடிகர் விஜய் நடத்தில் கல்வி நிகழ்ச்சி தமிழகமெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த செய்தி செம்ம வைரல். பல அரசியல் விமர்சகர்கள், அரைசியல்வாதிகள் வரவேற்றனர், சிலர் எதிர்த்தனர். எதிர்ப்பு இல்லனா வளர முடியாது என்று விஜய்யே சொல்லிருக்காரு, அவரை விட திரையுலகில் யாரும் அவ்வளவு எதிர்ப்பை சந்தித்திருக்கமாட்டார்கள்.
விஜயின் அரசியலுக்கு வருவோம். ரஜினி மற்றும் ரஜினி ரசிகர்கள் கண்ணோட்டம் அரசியலில் எப்படி இருந்தது என்றால், ரஜினி மக்கள் மன்றம் மூலம் முடிந்தளவு உதவிகளை செய்வோம் பின்னர் ரஜினி ஒரு முறை பிரச்சாரம் செய்தார் என்றால் போதும் முதலமைச்சர் ஆய்டுவாரு என்ற மனநிலை தான் இருந்தது.
ரஜினிக்கே அப்படி தான் இருந்தது, அவர் அதை வெளிப்படையாகவே கூறினார். எனக்கு எழுச்சி தெரியல, எழுச்சி தெரியட்டும் அப்போ வர்றேன் அதுவரை மக்கள் மன்றம் மூலம் நல்லது பண்ணுங்க என்று சொன்னார். ஆனால் இறுதியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. இந்த காணொளியை பார்த்தவுடன் ரஜினி ரசிகர்களை விட விஜய் ரசிகர்கள் கொஞ்சம் matured ஆக அரசியல் களத்தை காண்கின்றனர் என்று புரிய வைக்கிறது.
வைரல் வீடியோ:
விஜய் அரசியல் வந்தால் அவர்மேல் உள்ள பார்வை மாறிவிடுமா ?? #Leo #ThalapathyVijay
— RamKumarr (@ramk8060) June 23, 2023
Full Video Link : https://t.co/mdrXmNTPTr pic.twitter.com/p8hiJilpHl