போட்றா வெடிய.. தளபதி விஜயுடன் சேரும் இயக்குனர் கெளதம் மேனன். அவரே சொன்ன வீடியோ வைரல்.
தமிழ் சினிமாவின் நீண்ட நாள் வைட்டிங் கூட்டணி என்றால் அது கெளதம் மேனன் - தளபதி விஜய் கூட்டணி தான். யோகன் அத்தியாயம் ஒன்று அப்படிங்கிற படம், போஸ்டர் வெளியான போதே அவ்வளவு எதிர்பார்ப்பு. தமிழ் சினிமாவில் ஒரு ஜேம்ஸ் பாண்ட் படம் என்று.
ஆனால் திடீரென்று அந்த படம் நடக்கவில்லை, விஜயும் வேற படங்களில் பிஸி ஆகிவிட்டார், கௌதமும் வேற படங்களில். ஆனாலும் கெளதம் எங்கு சென்றாலும் கேட்கப்படும் ஒரு கேள்வி எப்போ சார் விஜய் சார் கூட படம் பண்ணுவீங்க.
தற்போது விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தில் லோகேஷ் கௌதமிடம் படம் பண்ணலாம் என்று கேட்டிருக்கிறாராம். இதை கெளதம் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் உறுதி செய்துள்ளார். ஏற்கனவே விக்ரம் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது கெளதம் தானாம். ஆனால் செம்பியன் நடித்தார்.
இப்போது தளபதி 67 படத்தில் முக்கியமான வில்லன் கெளதம் தான் என்று சொல்லப்படுகிறது.
விஜய் ரசிகர்கள் எப்படியும் விஜயும், கௌதமும் பட செட்டில் பேசிக்கொள்வர். கண்டிப்பாக யோகன் படம் மீண்டும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று நம்புகின்றனர். நடந்தா அன்னைக்கு தான் தீபாவளி.
Viral Video:
👀#Varisu @actorvijay pic.twitter.com/laYl5pkZY1
— Vijay Fans Trends (@VijayFansTrends) September 7, 2022