தலைசாய்த்து பார்த்துதான் தடுமாறி போனேனே.. தளபதி ஹீரோயின்னா சும்மாவா.. மீனாட்சி வீடியோ வைரல்.
தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய கதாநாயகியாக இருக்கப்போறாங்க மீனாட்சி சவுத்ரி. வயதும் இவங்களுக்கு கம்மி என்பதால் அடுத்த நான்கு அல்லது ஐந்து வருடத்திற்கு இவங்க தான் ரூல் செய்யப்போறாங்க அதில் எந்த சந்தகமும் இல்லை. அதன் முதல்படி தான் இந்த தளத்தி 68 படம், தி கோட். இந்த படம் விஜய்க்கே ஒரு புதுமுயற்சி தான்.
இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் ரொம்ப முக்கியமான இயக்குனர், இவர் எடுக்கும் படங்கள் எல்லாம் ஒரே மாதிரி இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்ணுவாரு. U படத்தில் இருந்து A படம் எல்லாமே எடுத்திருக்காரு. இதில் ரொம்ப உற்று பார்க்கவேண்டிய விஷயம் இவருடைய எல்லா படத்துக்கும் இசை யுவன் தான்.
சமீபத்தில் வெங்கட் பிரபு எடுத்த கஸ்டடி படம் பெருசா போகல, அதனால் கண்டிப்பா இந்த படத்தில் அவர் யார் என்று நிரூபிக்கும் கட்டாயத்தில் இருக்காரு. அதுமட்டுமில்லாமல் விஜய் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் இணைத்து மங்காத்தா படத்துக்கு பின் சேரவேண்டியது ஆனால் அது தள்ளிப்போய் தள்ளிப்போய் 13 வருடம் கழித்து சேர்ந்திருக்காங்க. அதுமட்டுமில்லாமல் அரசியல் செல்வதற்கு முன் இந்த படம் கடைசி படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இல்லையென்றால் இன்னும் ஒரு படம் பண்ணுவாரு.
அப்படிப்பட்ட படத்தில் மீனாட்சி நாயகியாக நடிப்பது அவங்களுக்கு அடிச்ச ஜாக்ப்பாட். கண்டிப்பா இவங்களை பெரிய லெவெலில் பேசப்படுவாங்க. இன்று வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் கூட இவங்க தான் நாயகி. சும்மா ஜொலிச்சிருக்காங்க.
Video:
Meenakshi ❤️ >>>>>pic.twitter.com/IRAD0pJK9m
— Joнɴ Cυrry 🛃 (@JohnyyBoy_) January 23, 2024