விஜய் சினிமாவை தாண்டி போய்ட்டு இருக்காரு...உயர்ந்துட்டார் மனிதனாக.. ஆனாலும் சிலர்.. முழு விவரம்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குவதற்காக, சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் நடிகர் விஜய் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். காய்கறிகள், அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, ரவை, சேமியா உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் மற்றும் வேட்டி, சேலைகள் போன்ற வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார்.
திருநெல்வேலியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் நிவாரண உதவிகள் வழங்கும்போது அப்போது திடீரென தன் தோளின் மீது விஜய்யின் கையை தூக்கி வைத்த பெண் ஒருவர் உற்சாகத்தில் அவரது கன்னத்தை கிள்ளி முத்தமும் கொடுத்தார். இது போன்ற நிகழ்வுகளும் நடந்தது.
சில மக்கள் கருத்து:
விஜய் ஆல்ரெடி இரண்டு மாவட்டத்துக்கும் பெருமளவில் நிதியுதவி பண்ணிட்டாரு இந்த நலதிட்ட உதவி ஒரு ஆதரவு சொல்ற மாதிரி தான். நிறைய பேர் சந்தோசபட்டுருக்காங்க. அதுனால எதிர் விமர்சனம் பண்றவுங்க அமைதியா உக்காருக்காங்கடா எலேய்.
விஜய் கூட செல்ஃபி எடுப்பதிலயே குறியா இருக்காங்க. வரம்பு மீறி தொடுவதும் கட்டிப்பிடிப்பதுமாக இருகிறார்கள். தமிழ்நாட்டின் வாக்காளர்கள் எம்ஜிஆரிலிருந்து மாறவே இல்லை. பொதுமக்களுக்கு அழகாயிருக்கணும் இல்ல கவர்ச்சியா பேசணும், அப்பதான் ஓட்டு போடுவாங்க.
கேரளாவில் நடிகர் மம்முட்டி பள்ளிவாசலில் தொழுகை செய்கின்ற வீடியோ பார்த்தேன்.அங்கு சுற்றியுள்ள நபர்கள் அவரை சராசரி மனிதராகவே பாவித்தனர்.சில வினாடிகள் தங்கள் கண்களை நிலைநிறுத்திகூட அவரை பார்க்காமல் கடந்து செல்கின்றனர்.சென்னையிலும் , திருநெல்வேலியிலும் நடிகர் விஜயை ரசிகர்கள் படுத்தும்பாடு காண்பதற்கு படுமோசமாக இருக்கிறது.சினிமா நடிகர்களின் விஷயத்தில் எழுபது ஆண்டுகள் பின்னோக்கியே இருக்கிறான் தமிழன் என்ற கருத்தும் பரவி வருகிறது.