கேஸ் கிளோஸ்ட். ரஜினி இல்ல.. விஜய் தான் இப்போது சூப்பர் ஸ்டார்” - சீமான்.
தற்போதைய தலைமுறையினர் பெரிதும் விரும்பும் நடிகர் விஜய். அவர்தான் இப்போது உச்சத்தில் இருக்கிறார். ரஜினி ரசிகர்களின் செயல் அநாகரீகமானது. - சீமான் கருத்து.
சீமான் அவர்கள் விஜயை ஆதரிக்க முக்கிய காரணம், அவரை பொறுத்த வரை, விஜய் - தமிழன் ரஜினி - கன்னடன் என்றும் ஒரு சிலர் சொல்கின்றனர்.
ஊடகவியலாளர் பிஸ்மி அவர்கள் நடிகர் ரஜினியை முன்னாள் சூப்பர் ஸ்டார் சொன்ன கருத்தில் முரண் இருந்தால் மாற்று கருத்து கூறுவதைவிட்டு அவரின் அலுவலகத்திற்கே சென்று மிரட்டிய ரஜினிகாந்த் ரசிகர்கள் செயல்கள் வன்மையாக பலர் கண்டித்தனர். இன்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிஸ்மி, சீமான், சரத்குமார் கணக்குப்படி ரஜினிகாந்த் 28 வயதில் சூப்பர்ஸ்டார் ஆனதை 50 வயதில் தான் விஜய் எட்டியிருக்கிறார்
ரஜினி படம் தென்னிந்தியாவின் 4 மொழிகளிலும் வசூலை குவித்து அவர் சூப்பர்ஸ்டார் ஆனார். மும்பையில் ரஜினி படம் 100 நாள் ஓடிய அளவுக்கு வேறு யார் படமும் ஓடியதில்லை தமிழ் பட உலகுக்கு நிகரான தெலுங்கு உலகில் இன்னும் விஜய் படம் பெரிதாக ஓடுவதில்லை. வட மாநிலங்களில் அவர் படம் டப்பிங் செய்து ரிலீஸாவதே இப்போது தான். இன்னமும் ஒட்டுமொத்த வசூலில் #ரஜினி படம் தான் முதலிடம் இருக்கு.
இதையெல்லாம் 50வயதிலும் எட்டாமல் சூப்பர்ஸ்டார் விஜய் எப்படி ஆவார் என்று ரஜினி ரசிகர்கள் கருத்து.
தற்கால சூப்பர் ஸ்டார் ரஜினியா அல்லது விஜய்யா எனும் சர்ச்சை நீடிக்கிறது.
Tweet:
திரைத்துறையின் உச்ச நட்சத்திரம் குறித்துக் கருத்துத் தெரிவித்ததற்காக பத்திரிக்கையாளரை மிரட்ட முனைவதா?https://t.co/XiBxTDHIMK pic.twitter.com/UIqpAViRXd
— சீமான் (@SeemanOfficial) January 2, 2023