மனுஷன் பொசுக்குன்னு விட்டுட்டு போய்ட்டாரு மனோபாலா.. தளபதி விஜய் வந்துட்டாரு இறுதி அஞ்சலி செலுத்த.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
இயக்குனர் - நடிகர் - தயாரிப்பாளர் என பன்முகத்திறமையை வெளிப்படுத்திய அண்ணன் திரு.மனோபாலா அவர்களுடைய மரணம் தமிழ்த்திரையுலகிற்கு பேரிழப்பு. அவர்களின் இல்லத்துக்கு சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி ஆழ்ந்த இரங்கலை பலர் தெரிவித்தனர். அண்ணன் அவர்களின் இழப்பால் வாடும் குடும்பத்தார் - நண்பர்களுக்கு ஆறுதலாய் இருக்கின்றனர் ரசிகர்களும், சக கலைஞர்களும்.
காலத்தால் அழியாத கலைப்படைப்புகளைத் தந்த திரைப்பட இயக்குநரும், தனது நகைச்சுவை ததும்பும் நடிப்பால் மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகருமான என் பேரன்புக்குரிய அண்ணன் மனோபாலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன் என்று சீமான் இரங்கல் தெரிவித்தார்.
தமிழ் திரைப்பட இயக்குனரும், பிரபல நடிகருமான திரு.மனோபாலா அவர்கள் உடல்நிலை குறைவால் இன்று மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். கழகத்தின் மீது தீவிர பற்று கொண்டிருந்தவரும்,தலைமை கழக பேச்சாளரும் ஆன திரு.மனோ பாலா அவர்களை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து.
உச்ச நடிகர்களில் நடிகர் விஜய் மட்டுமே நேரில் சென்று ஆறுதல் கூறினார். அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல்.
Video:
Full Video 🫂💔🙏#Leo @actorvijaypic.twitter.com/dVAFiKy3FN
— Mᴜʜɪʟツ (@MuhilThalaiva) May 3, 2023