என்னோட கனவுப்படம் இதுதான்.. முரட்டு சம்பவம்.. என்னோட அண்ணன் தளபதி.. வீடியோ வைரல்.

Vijay leo loki video

இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஒரு படம் வருகிறது என்றால் லியோ தான். இந்த படத்தின் பிசினெஸ் ஏற்கனவே முடிஞ்சிருச்சு. இன்னைக்கு தெலுங்கு ஸ்டேட்ஸ்ல யார் ரிலீஸ் பண்றாங்க என்ற அறிவிப்பும் வந்திடுச்சு. ஒரு படம் வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இப்படி பிசினெஸ் ஆவது இதுவே முதல் முறை என்று நினைக்கிறோம்.

இன்னைக்கு விஜய் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அப்டேட் தான், இந்து இயக்குனர் லோகேஷ் SNS காலேஜுக்கு போயிருந்தாரு, அங்க விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல சினிமா ரசிகர்களுக்கே நிறைய அப்டேட் கிடைத்தது. லியோ பற்றி நிறைய பேசினாலும், அவர் பண்ணப்போகும் அடுத்த படம் போன்றவற்றையும் பற்றியும் பேசினார்.

Vijay leo loki video

அடுத்து இவர் ரஜினியை வைத்து இயக்குனர் என்றும் சொல்லப்படுகிறது. அது confirm ஆனது போல தான் தெரிகிறது. அந்த படத்தை முடித்துவிட்டு தான் கைதி 2 படம் பண்ணுவார் என்று நினைக்கிறோம். மேலும் அதுபோக அவருக்கு ட்ரீம் ப்ராஜெக்ட் ஒண்ணுவேற இருக்காம், அது தான் இரும்புக்கை மாயாவி.

அதில் யார் நடிக்கப்போறாங்க என்பது இப்போவே எல்லாருக்கும் தெரியும். சூர்யா தான் நாயகன். இதை முன்னாடியே ஒருமுறை உறுதிப்படுத்தியிருந்தாரு. லியோ வந்து விஜய் சினிமா வாழ்க்கையிலேயே வித்தியாசமான படமாக இருக்கும் என்று நினைக்கிறோம். இது கைதி போன்ற படமாம். ஒரே பாட்டு மட்டும் தான் போல.

Video:

Related Posts

View all