தளபதி விஜய் நூலகம் இன்று முதல் தமிழகமெங்கும்.. அருமையான தொடக்கம்.. பல விமர்சனங்களுக்கு பதிலடி.!
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.
தளபதி விஜய் விலையில்லா விருந்தகம் ✓ தளபதி விஜய் குருதியகம் ✓ தளபதி விஜய் விழியகம் ✓ தளபதி விஜய் பயிலகம் ✓ தளபதி இலவச சட்ட ஆலோசனை மையம் ✓ Now #தளபதிவிஜய்நூலகம் ✓✓✓✓✓
சினிமா நடிகருக்கு என்ன அறிவு இருக்கு ? ~ பத்திரிகையாளர் பிஸ்மி.
புத்தகம் வாசிப்பு, சமூக அறிவு பெற நூலகம் திறக்கும் அளவிற்கு அறிவுருக்கு. இங்கு வந்து படிச்சு பிஸ்மி அறிவ வளர்த்துக்க வாழ்த்துக்கள்.
இன்று #தமிழகத்தில் முதல் இடமாக தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3-வது தெரு, CTO காலனி, மேற்கு தாம்பரத்தில் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புத்தகம் படிக்கும் திறனை மேம்படுத்தவும், பொது அறிவு சிந்தனை வளர்க்கும் விதமாக தளபதி விஜய் நூலகம் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பகுதி, வட்டம், கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் விரைவில் தளபதி விஜய் நூலகம். நூலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வாங்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்.