படித்த கல்லூரிக்கு சென்ற லோகேஷ்.. தளபதி 67 அப்டேட் கேட்ட மாணவர்கள். வெறித்தனமான வீடியோ வைரல்.
சமீபத்தில் ஒரு படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆனது. இயக்குனர் லோகேஷ் கனகரஹ் proudly presents.. என்று அந்த ட்ரைலர் ஆரம்பிக்கும். அதன் டைட்டில் கார்டுலையே பாருங்க இவர் பெயர் வந்ததால் படம் நல்லா இருக்கும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்திருப்பாங்க. அந்த படத்தின் டைட்டில் மைக்கேல். சந்தீப் கிஷான் நடிச்சிருக்காரு. அந்த படம் வரும் பிப்ரவரி 3ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
அதனால் அந்த படத்தின் ப்ரோமோஷன் ஈவென்ட் நேற்று கோவையில் இருந்து ஆரம்பித்துள்ளனர். தளபதி 67 ஷூட் கொஞ்சம் பிரேக் எடுத்திருக்கிறது படக்குழு. அதனால் நேற்று கோவையில் நடந்த ஈவெண்ட்டில் லோகேஷ் நேற்று கலந்துகொண்டார். கமல் பரிசளித்த லெக்சஸ் காரில் தான் அவர் வந்திருந்தார். மாணவர்கள் வெள்ளத்தில் நீந்தினார்.
அதுவும் இப்போது தமிழ் சினிமா இருக்கும் நிலைமையில் இயக்குனர்களில் யாருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது கண்டிப்பாக லோகேஷ் கனகராஜ் தான். மாஸ்டர், விக்ரம் படத்துக்கு பின் அவருடைய range வேற மாதிரி மாறிடுச்சு. இப்போ அவர் தமிழ் சினிமாவில் அவருக்கென ஒரு யூனிவெர்ஸ் ஆரம்பிச்சிருக்காரு. அவருக்கு என்று ஒரு பாதை.
நேற்று அந்த ப்ரோமோ விழாவில் கலந்துகொண்டதால் அவர் எடுக்கும் படத்தின் அப்டேட் பற்றி கேட்காமல் இருப்பாங்களா மாணவர்கள். அவர் எங்கு சென்றாலும் கடைசி 3 மாதங்களாக மக்கள்/ரசிகர்கள்/செய்தியாளர்கள் கேட்கும் கேள்வி தளபதி 67 பற்றி தான். தளபதி விஜய் படம் வேற. அவருடைய கல்லூரிக்கு சென்றுவிட்டு அப்டேட் கொடுக்காமல் இருப்பாரா.
வீடியோ:
Feb 1st, 2nd and 3rd — #Thalapathy67 🥵🤯pic.twitter.com/cUxR3GPnY7
— LetsCinema (@letscinema) January 25, 2023